மூன்றம் எண்ணில் பிறந்தவர்களா..? உங்களுடைய வாழ்க்கை குறித்த தெரியாத ரகசியங்கள்..!

1
1335

எண் மூன்று எப்பொழுதுமே மிக முக்கியமானதாக உள்ளது. நமது வாழ்க்கையிலும் அனைத்து வகையிலும் எண் மூன்றுக்கு சிறப்பு அங்கிகாரம் உள்ளது. 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் மூன்றாம் எண்களில் சேர்ந்வர்களே. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிஷ்சாலிகள் தான்.

மூன்றம் எண்ணில் பிறந்தவர்களா..? உங்களுடைய வாழ்க்கை குறித்த தெரியாத ரகசியங்கள்..!

குண அமைப்பு:
மூன்றாம் எண்களில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள். ஆதலால் நீங்கள் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளை பெற்றிருப்பிர்கள். உங்களுக்கு பேச்சாற்றல் எழுத்தாற்றல் சிறப்பாகவே அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தவர்களே. நல்லர்களுடன் இருக்கும் போது சுமூகமாக பழகும் குணகும். அத்துமீறி நடப்பவர்களிடத்தில் கண்டிக்கும் தைரியமும் உடையவர்கள் நீங்கள். தங்களை சார்ந்தவர்கள் தவறு செய்து இருப்பின் அதை எளிதில் மன்னிக்கும் குணத்துடன் இருப்பீர்கள். எந்த காரியமாக இருந்தாலும் அதனை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் தாங்கள்.

மிகவும் சுறுசுறுப்பாகவும், எதையும் எளிதில் சகித்துக்கொள்ளும் தன்மையுடன் இருப்பிர்கள். சுயநலம் இல்லாமல் உதவி செய்யக்கூடிய குணம் உங்களுக்கு உண்டு. உண்மையே பேசுபவரா இருப்பதால் நீங்கள் வாழ்வில் நீதி நியாயத்தையும் வாழ்வில் மூச்சாக கடைப்பிடிப்பார்கள். வில்லில் இருந்து வரும் அம்பு போல் வார்த்தைகள் கடுமையாக இருக்கும். சற்று முன்கோபக்காரரான நீங்கள் கோபம் தணிந்த பின் உண்மையை உணந்து கொள்வீர்கள். மனதில் எதையும் ஒளித்து வைத்திருக்க தெரியாது. அதனால் அனைவரிடத்திலும் கள்ள கபடமின்றி இருப்பீர்கள். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.

உடலும் ஆரோக்கியமும்:
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தமான உயரம் உடையராக இருப்பார். நல்ல நிறத்துடன் கூரிய மூக்குடன் இருப்பார்கள். குரலில் அதிகாரமும், கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். சீக்கிரமே உங்களுக்கு வழுக்கை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும். இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு.

குடும்ப வாழ்க்கை:
குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக சமாளித்து விடுவார்கள். பெற்றோர் திருமணத்தை விடவும் காதல் திருமணம் உங்களின் வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சியாக அமையும். கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும்.

மூன்றம் எண்ணில் பிறந்தவர்களா..? உங்களுடைய வாழ்க்கை குறித்த தெரியாத ரகசியங்கள்..!

பொருளாதாரம்:
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. பொதுக் காரியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.

தொழில்:
நீங்கள் புத்திசாலியாக இருப்பதால் உங்களுக்கு ஆசிரியராகவும், தலைமை ஆசிரியர் பணி உங்களுக்கு அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும்.

குரு திசை:
குருவுக்குரிய திசை வடகிழக்கு மூலை எனக்குறிப்பிடக்கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.

வழிபாட வேண்டிய கடவுள்:
குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மல்ர்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது நல்லது. குருவுக்கு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியையும், வழிபடலாம்.

அதிர்ஷ்டமாவைகள்:
அதிர்ஷ்ட தேதி,-3,12,21,30
அதிர்ஷ்ட நிறம் – பொன் நிறம், மஞ்சள்
அதிர்ஷ்ட திசை – வடக்கு
அதிர்ஷ்ட கிழமை – வியாழன்
அதிர்ஷ்ட கல் -புஷ்பராகம்
அதிர்ஷ்ட தெய்வம் – தட்சிணாமூர்த்தி

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here