எங்குமில்லாத எந்திரத்தாலான சனீஸ்வரன் கோவில்!அங்கு போவதால் என்ன சிறப்பு?

0
4644

சனீஸ்வர பகவான், அவருக்குண்டான பரிகாரம்ன்னாலே திருநள்ளாறுதான் நினைவுக்கு வரும். ஆனா, ஆரணில இருந்து சுமார் 12 கிமீ தூரத்தில் ஏரிக்குப்பம்ன்ற திருத்தலத்தில் யந்திர ரூபமாய் அருளும் சனீஸ்வர பகவான் ஆலயத்திலும் பரிகார பூஜைகளை செய்யலாம்.

பல வருடங்களுக்கு முன் ஆடு மேய்க்கும் சிறுவர்களால் இந்த யந்திரம் வெளிப்பட்டது. உடனே, கிராம அலுவலருக்கு விவரம் சொல்ல, அவர் தொல்பொருள் நிபுணர்கள் வரவைத்து ஆராய்ந்ததில் 15-ம் நூற்றாண்டில் இருந்த யந்திர சனிபகவான் என அறியப்பட்டது.

அகழ்வாய்வாளர்களும் இதை ஆய்வு செய்து அதன் தொன்மையை உறுதி செய்தாங்க. அந்த யந்திர சிலையை அவ்வூரிலேயே பழைய இடத்தில் சிறிய கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு நித்திய அனுஷ்டான பூஜைகளும், சனிக் கிழமைகளில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருது.

எந்திர சனீஸ்வரம் :

எந்திரம்ன்னாலே அது செப்பு தகட்டில் செஞ்சதா இருக்கும். ஆனாள் இந்த கோவிலில் சித்தர்களால் கல்லில் எந்திரம் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது இக்கோவிலில் சனிபகவான் யந்திர வடிவில் 5 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட அறுகோண வடிவத்தில் அருள்புரிகிறார். அதர்ன் போக்க ஆறு முனைகளில் திரிசூலமும், அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமார் வடிவங்களும் இருக்கு.

யந்திர சிலையின் மேல்பக்கம் தென்புறமாக சூரியனும், நடுவில் ஸ்ரீசனீஸ்வரபகவானின் வாகனமான காகத்தின் உருவமும், வலப்புறமாக சந்திரனும் இருக்கிறார்கள். அவற்றின் கீழே ஷட்கோண யந்திரமும் நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்களும் இந்த யந்திரத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. . இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் பார்க்கவே முடியாது.

அதற்கும் கீழே லக்ஷ்மி கடாக்ஷ வசிய யந்திரமும், பஞ்சபூத ஆகர்ஷண யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது.

பரிகாரம் :

எள் முடிச்சிட்ட தீபம், நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றி ஒன்பது வாரங்கள் வழிபாடு செய்ய, வேண்டிய வரங்கள் கைகூடும்.  எள் முடிச்சிட்ட தீபம் , நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றி வேண்டுதல் புரிகின்றனர்.

9 வாரங்கள் தொடர்ந்து இங்கு வந்து வழிபாடு செய்து, வேண்டும் வரங்களை பெற்றுச் செல்கின்றனர். பக்தற்கள் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள ‘ பாஸ்கர தீர்த்தம் ‘ என்ற தீர்த்தக் குளத்தில் நீராடி தலத்தில் வழிபட்டு செல்கின்றனர். இந்த பாஸ்கர தீர்த்தம் நளன் தீர்த்தத்துக்கு ஒப்பானது.

பலன்கள் :

திருமணப் பிராப்தி, குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, லக்ஷ்மி கடாட்சம், சனீஸ்வர ப்ரீத்தி மற்றும் சகல தோஷ நிவர்த்தி வேண்டி பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து , அபிஷேக அர்ச்சனைகள் புரிகின்றனர்.

தல வரலாறு :

அது 1535ஆம் ஆண்டு! அப்போது இப்பகுதியை ஆட்சி செய்து வந்த நாயக்க மன்னரின் படைத்தளபதியாக விளங்கிய வையாபுரி என்பவர், இவ்வழியாக குதிரையில் சென்று கொண்டிருந்தார். காரணம் ஏதுமின்றி, திடீரென ஓடும் குதிரையிலிருந்து கீழே விழுந்த வையாபுரிக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது! குதிரையும் நிலைதடுமாறி விழுந்ததால், அதற்கும் பலத்த அடி! ஊர் மக்கள் ஓடி வந்து உதவி செய்தனர்!

அச்சமயம் ஒரு பெண்ணின் வாயிலாக இறைவன் வெளிப்பட்டு, சனீஸ்வர பகவானுக்கு கோயில் ஒன்றை இங்கே எழுப்புமாறும், சிறப்பு வழிபாடுகள் செய்யச் சொல்லி, மேலும் அதனால், வையாபுரியின் உடல்நலம் தேறும் என்றது. அதன்படியே உடல் தேறிய வையாபுரி, பெரியோர்களின் ஆலோசனைப்படி அமைந்ததுதான் இந்தச் சிலாரூபம்! நான்கு கால பூஜைகள் விசேஷமாக நடைபெற்று வந்தன.

செல்லும் வழி ;

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ளது ஏரிகுப்பம். ஆரணி மற்றும் போளூரிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன! ஆரணி-படவேடு பேருந்து சாலையில் நடுகுப்பத்துக்கு அடுத்ததாக ஏரிகுப்பம் கூட்ரோட்டிலிருந்து ஒரு கி.மீ. ஆரணியில் தங்கி இத்தல தரிசனம் செய்யலாம்.

தரிசன நேரம்:

காலை: 7 மணி முதல் 1 மணி வரை
மாலை: 4 மணி முதல் 7 மணி வரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here