5 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.. களத்தில் இறங்கும் நோக்கியா..!

1
2700

உலகில் அனைத்துத் தொழில்துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது, அதிலும் டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு பெரிய அளவிலான வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரையில் VGA கேமரா கொண்ட போன்களைப் பயன்படுத்தி வந்த நாம் தற்போது டிஜிட்டல் கேமராவிற்கு இணையாகக் கேமரா தற்போது ஸ்மார்போனிலேயே உள்ளது.

இதையும் தாண்டி தற்போது ஸ்மார்ட்போனிலேயே பிங்கர்பிரின்ட் சென்சார், ஃபேசியல் பியோமெட்ரிக்ஸ் எனப் பல தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஹூவே நிறுவனம் பி20 என்பது உலகின் முதல் முறையாக 3 கேமரா கொண்ட போனை வெளியிட்டது, இதை எந்த நிறுவனத்தாலும் ஈடு செய்ய முடியவில்லை.

ஆனால் மொபைல் போன் உலகின் முன்னாள் சூப்பர்ஸ்டார் ஆன நோக்கிய ஹூவே நிறுவனத்தைத் தூக்கி சாப்பிடும் அளவிற்குத் தனது புதிய தயாரிப்பான நோக்கியா 9 மாடல் போனில் 5 கேமரா கொண்டு தயாரிக்கிறது.

இந்தப் போன் குறித்து ஸ்லாஷ்லீக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here