தெலுங்கில் மாத்தாட போகும் பிரியா பிரகாஷ் வாரியர்..!

0
168

கோடிக்கணக்கான இளைஞர்களைக் கண் அடித்து மயக்கிய ஒரு அதார் லவ் என்னும் மலையாள படத்தின் ஹீரோயின் பிரியா பிரகாஷ் வாரியர் இணையத்தில் இன்றளவும் டிரென்டாக உள்ளார் என்றால் மிகையில்லை. மேலும் சமீபத்தில் பிரியா நடிப்பில் வெளியான ஸ்ரீதேவி பங்களா படத்தின் டீசர் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சொல்லப்போனால் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூட இந்தப் படைத்தை எதிர்த்து வழக்குத் தொடுப்பதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில், பிரியா பிரகாஷ் வாரியருக்கு பம்பர் ஆஃபர் கிடைத்துள்ளது.

இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றுள்ள பிரியா பிரகாஷ் வாரியருக்கு பிற மொழிகளில் வாய்ப்புக் கிடைப்பது என்பது பெரிய விஷயம் இல்லையென்றாலும், தற்போது வந்துள்ள செய்தி முக்கியமான செய்தியாகும்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்தப் படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் ஹீரோயின் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இதே படத்தில் நானி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

மேலும படக்குழுவினர் பிரியா பிரகாஷ் வாரியரை லுக் டெஸ்ட் மற்றும் அடிஷனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், இதில் தேர்வானால் தெலுங்கு திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் எனத் தெரிகிறது.

விக்ரம் குமார் இயக்கும் இந்தப் படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, இந்தப் படம் பிப்ரவரி 2019இல் துவங்க உள்ளதாகத் தெரிகிறது. மேலும் இப்படத்திற்குப் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here