வயகரா மாத்திரை பயன்படுத்தி உறவுக்கொண்டாதால் கொன்றேன் மனைவி பரபரப்பு வாக்கு மூலம்.

0
1417

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கவியரசு இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த இரண்டு வருடஙங்களுக்கு முன் மனைவியை பிரிந்து விட்டார். அதன் பிறகு தருமபுரியில் வசித்து வந்தார். அங்கு நிர்மலா என்ற பெண்ணுடன் பழக்கம் எனவே கவியரசு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கவியரசு பைனான்சியராக உள்ளார். வயாகரா மாத்திரைகளை சாப்பிட்டு, மனைவி நிர்மலாவை கட்டாய உடலுறவில் ஈடுபடுத்தியுள்ளார். பல முறை கவியரசுவிடம் எடுத்து கூறியும் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இதுபற்றி தனது முன்னாள் காதலன் அபினேஷ்,27 என்பவரிடம் நிர்மலா தான் படும் கஷ்டத்தை எடுத்து கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் கவியரசுவை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுமாறு கூறிய அவர், அதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். 5 பேர் கொண்ட கூலிப்படை அமைத்த அபினேஷ் இரு வாரங்களுக்கு முன்பு கவியரசுவை கொலை செய்து தர்மபுரி அருகே குண்டலப்பட்டி-மல்லிக்குட்டை செல்லும் சாலையோரத்தில் குழி தோண்டி உடலை புதைத்து விட்டார். அதன் பிறகு நிம்மதியாக இருந்தனர் நிர்மலா அபினேஷ். தனது மகனை காணவில்லை என கவியரசுவின் தாய் போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில் கவியரசுவின் செல்போன் நிர்மலாவிடம் இருப்பது தெரிந்தது. அதில் இருந்து அவர் அபினேஷூடன் தொடர்ந்து பேசி வருவதும் தெரியவந்தது. போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் முன்னுக்குப்பின் பதில் அளித்தனர். இதனையடுத்து அபினேஷை தனியாக விசாரணை செய்தனர். நிர்மலாவுக்கு கவியரசு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்து, உடலை புதைத்ததாகவும், அதற்கு தேவையான பண உதவியை, நிர்மலா செய்ததாகவும் அபினேஷ் ஒப்புக்கொண்டார். பிறகு உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here