பெண்களின் ஜீன்ஸ் பேன்டில் பாக்கெட் சைஸ் சிறியதாக இருப்பது ஏன்..?

0
477

இன்றைய நடைமுறையில் ஆண்களும் சரி பெண்களும் சரி இருபாலருமே பேன்ட் அணிந்து வருகின்றனர். பேன்டில் இருக்கும் பாக்கெட் அளவுகளில் பெண்களுக்குச் சிறிதாகவும், ஆண்களுக்குப் பெரிதாகவும் உள்ளது.

இது ஏன் தெரியுமா..?

15ஆம் நூற்றாண்டு

ஆண்கள் பேன்ட் அணியும் வழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாதகவே துவங்கியது. 15ஆம் நூற்றாண்டில் ஆண்கள் அணியும் பேன்ட்களில் பாக்கெட் ஆடையின் வெளியில் வைத்துத் தைக்கப்பட்டது.

அதைதொடர்ந்து 18ஆம் நூற்றாண்டில் தையல்காரர்கள் பாக்கெட்-ஐ ஆடைக்குள் வைத்துத் தைக்கத் துவங்கினர். இதன் பின்பு பேன்ட், கோட் என அனைத்திலும் பாக்கெட் ஆடைக்குள் வைத்துத் தைக்கப்பட்டது.

பரிணாம வளர்ச்சி

அதன் பின் தற்போது பல்வேறு வடிவத்தில் பாக்கெட் உருவெடுத்துள்ளது. தற்போது பேன்டுகளில் முன் பின் என இரு பக்கத்தில் பாக்கெட் வைக்கப்பட்டு ஆடைகள் தயாரிக்கப்படுகிறது.

அதுவும் கார்கோ மற்றும் ஜீன்ஸ் பேன்டுகளில் சற்று கூடுதலாகவே பாக்கெட்-கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்கள்

15ஆம் நூற்றாண்டு முதல் பெண்கள் தங்களது தேவைகளுக்குப் பாக்கெட்-களை அதிகளவில் பயன்படுத்தியது கிடையாது, அவர்களது தேவைகளுக்கு ஏற்ப எப்போதும் கையில் பர்ஸ் அல்லது ஹேண்ட்பேக் வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் அவர்களுக்குப் பெரிய அளவிலான பாக்கெட் தேவைப்படுவது இல்லை.

இன்றைய தலைமுறையினர்

பாக்கெட் மூலம் எவ்விதமான பிரச்சனையும் சந்திக்காமல் இருந்த பெண்களுக்குத் தற்போது பிரச்சனை உருவாகியுள்ளது.

இன்றைய தலைமுறையினர் பெண்கள் ஜீன்ஸ் மற்றும் பிற பேன்ட்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் ஆண்களைப் போல் போன், பணம், கைகுட்டை போன்ற அடிப்படைத் தேவைகளை வைக்கப் பாக்கெட் அவசியமாக உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள்

ஜீன்ஸ் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இன்னமும் பாக்கெட் அளவுகளைச் சிறிதாகவே வைத்து ஆடைகளைத் தயாரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் சில ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாற்றங்களைச் செய்து வந்தாலும் அனைத்து நிறுவனங்களும் இதைச் செய்வதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here