சூரியனைப் பார்த்தால் தும்மல் வருகிறதா? காரணம் இதுதான்!

0
252

பெரும்பாலும் தூசு இருக்கும் இடத்தில், தும்மல் வரும் என்று நாம் கருதுகிறோம். ஆனால், சூரியன் அலல்து பிரகாசமான வெளிச்சத்தைப் பார்க்கும்போது சிலருக்கு தும்மல் ஏற்படும்.அந்தத் தும்மலை ‘Photic Sneezing’ என்று கூறுகின்றனர். இது ஐந்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது.

சூரியனைப் பார்த்தால் தும்மல் வருகிறதா? காரணம் இதுதான்!

அதுபோல நம் ஒவ்வொருவருமொரே மாதிரி தும்முவது கிடையாது. சிலர் தும்மினால் சத்தம் வராது. சிலர் தும்மினால், இடி இடிப்பதுபோல சத்தம் வரும். இப்படி விதவிதமாக சத்தம் வருவதற்குக் காரணம், நமது உடல்வாகு, தசைகளின் கட்டமைப்பு , சுவாசக் குழாய் போன்றவைதான்.

தும்மல் என்பது நுரையீரலில் இருந்து திடீரென வெளிவரும் காற்று, வாய், மூக்கு வழியாக வெளிப்படுவதாகும்.மூக்கில் அடைப்பு ஏற்பட்டாலோஅல்லது நமைச்சல் ஏற்பட்டாலோ ஏற்படும் நிகழ்வுதான் தும்மல். சில சமயங்களில் குறிப்பிட்ட உணவு, சுற்றுப்புற ஒவ்வாமைகள் போன்றவற்றாலும் தும்மல் வரும்.

இதனை ‘Autosomal Dominant Compulsive Helio Opthalmic Outbursts Of Sneezing’ அல்லது ACHOO என அழைக்கின்றனர். சூரியனைப் பார்த்தால் வரும் தும்மல் ஏற்படுகிறது என்பது, இன்னும் முழுமையாக விளங்காத அறிவியல் புதிராகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here