ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்ன தெரியுமா?

0
331

ஸ்படிகம் என்றால் என்ன :

பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில்தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்தபாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து அவற்றிலிருந்து ஸ்படிக லிங்கம் மற்றும் ஸ்படிக மாலை போன்றவறறை பிரதிஷ்டை செய்கிறோம்.

ஸ்படிகத்திற்கு எதிர்மறை அதிர்வுகளைக் அகற்றி நேர்மறை அதிர்வுகளை அதிகரிக்கச் செய்யும் சக்தி இருக்கிறது. ஸ்படிகம் உடல் மற்றும் மனோரீதியான ஆரோக்கியத்தை
அதிகரித்து உடல் உஷ்ணத்தைச் சமநிலையில் வைக்கும் சக்தி பெற்றுள்ளது.

அதனால்தான் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் ஸ்படிக மாலை தரித்து தியானம், ஜபம் செய்கின்றனர்.ஸ்படிகம் இமய மலையின் அடிவாரத்தில் கிடைக்கிறது. இது மிகவும் விலைமதிப்புள்ளதாக கருதப்படுகின்றது.

ஸ்படிக லிங்கம் சுயம்புவாக கிடைக்கக்கூடியது, அதனால்தான் இது மிக மதிப்பு மிக்க விக்ரகமாக கருத்தப்படுகிறது ஸ்படிகம் சிவனின் நெற்றியை அலங்கரிக்கும்
சந்திரனிலிருந்து விழுந்ததாகக் கூறுவோரும் உண்டு.ஸ்படிக லிங்கதை வீட்டில் வைத்து வழிபடுவது மிகவும் உகந்தது. அதனால் கிடைக்கும் நன்மைகளை இங்கு
பார்க்கலாம்.

வியாபார விருத்தி !

வியாபாரிகள் இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டிலோ தங்கள் வியாபாரக் கேந்திரத்திலோ வைத்து வழிபடலாம், முறைப்படி பூஜிப்பதால் ஸ்படிகம் தன ஆகர்ஷண சக்தி
படைத்ததாக மாறுகிறது.அதனால் நல்ல லாபம் கிடைப்பதுடன் தொழிலும் மேலும் விருத்தியடையும்.

மாணவர்களுக்கு ஞாபக சக்தி :

மாணவர்கள் ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் நல்ல தீர்க்கமாக அறிவைப் பெறலாம். இந்த ஸ்படிக லிங்கத்தை 10 நிமிடங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டு பிராத்தித்தால் நல்ல ஞாபக சக்தி, விஷயங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவை கிடைக்கும்.

வேண்டியது நடக்கும் :

சூரிய உதயம் மற்றும் , அஸ்தமன நேரங்களில் ஸ்படிக லிங்க பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். தினமும் பூஜை செய்ய நல்ல மனத்திண்மையும் நேர் வழியில் செல்ல விருப்பமும் உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here