ஏன் துளசிச் செடியை கட்டாயம் வீட்டில் வளர்க்க வேண்டும்? எந்த திசையில் வைக்க வேண்டும்?

0
127

துளசிச் செடி இந்தியாவின் பாரம்பர்ய செடிகளில் ஒன்று. வேம்பு, அரச மரம், துளசிச்
செடி போன்றவ அரிய மருத்துவ குணங்களும் , நேர்மறை சக்தியையும் தருபவை.
அதனால்தான் அந்த காலத்தில் அவற்றை கடவுளாக்கி வழிப்பட்டனர்.

அறிவியல் பூர்வமாகவும் சரி, ஆன்மீக வழியிலும் சரி, துளசியை வைப்பதல இரட்டைப்
பலன்கள் கிடைக்கின்றது. அந்த நன்மைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

 

நன்மை-1

உங்கள் வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ, துளசிச் செடி இருப்பது அத்தனை
நல்லது. காற்றில் இருக்கும் மாசுக்களை சுத்தப்படுத்தி தூய ஆக்ஸிஜனை தரும்
வல்லமை துளசிக்கு உண்டு.

 

நன்மை-2

துளசி கலந்த நீரை தினமும் குடிப்பதால் சளி, கபம், சிறு நீரகக் கற்கள், காய்ச்சல்
போன்றவை வராது. நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். ரத்தம் சுத்த்கரிக்கும் சரும நோய்கள் குணமாகும்.

 

 

நன்மை- 3 ;

துளசிச் செடி நேர்மறை எண்ணத்தை உண்டாக்கும். வீட்டில் கெட்ட சக்தி நெருங்காது.
துளசித் தளம் உள்ள வீட்டிற்கு யாரும் பில்லி சூனியம் வைக்க முடியாது.

நன்மை-4

தினமும் துளசிச் செடியில் நீர் ஊற்றி, தீபம் ஏற்றி வந்தால் மகா விஷ்ணுவின் பரிபூரண
அருள் கிடைக்கும். வாழ்வில் ஏற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் செல்வம் உயரும்.

நன்மை-5 ;

துளசிச் செடியை வடகிழக்கு திசையில்தான் வைக்க வேண்டும். துளசி மாடத்தில்
இருந்தால் இன்னும் நல்லது. இல்லையென்றால் தொட்டியிலும் வளர்க்கலாம். அதனை
வாட விட வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here