காங்கிரஸை கண்டு பயப்படும் பிஜேபி.. காரணம் ப்ரியங்கா காந்தி..!!

0
360

மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்துடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அதிரடியான அறிவிப்புகளையும் முடிவுகளை எடுத்து வரும் நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் அனைத்து இந்திய பொதுச் செயலாளர் பதவியை ராகுல் காந்தியின் சகோதரி ப்ரியங்கா காந்திக்கு அளிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பொறுப்புகளை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்புதிய பதவி மற்றும் பொறுப்புகளால் என்ன நடந்து விடும்..? ஏன் இந்தச் செயலை கண்டு பிஜேபி மட்டும் அல்லாமல் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணியும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

என்ன காரணம்..?

காங்கிரஸ் இந்த முடிவைத் தாமதமாக எடுத்திருந்தாலும், இந்த முடிவு மிகவும் சரியான முடிவு எனப் பலரும் கூறுவதற்கான காரணங்களை இப்போது பார்ப்போம்.

ப்ரியங்கா காந்தி சிறந்த பேச்சாளர் இது காங்கிரஸ் கட்சி உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற முக்கிய வாய்ப்பாக இருக்கும், ஏனெனில் பிஜேபி ஆதிக்கம் நிறைந்த இம்மாநிலத்தில் மோடி, யோகி ஆதித்யநாத் என முக்கியத் தலைவர்கள் அனைவரும் சிறந்த பேச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பலத்தை உடைக்க ப்ரியங்கா காந்தி மிகப்பெரிய கருவியாக இருப்பார்.

ப்ரியங்கா காந்தி கிழக்கு உத்தரப் பிரதேத்தின் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம் மக்களின் வாக்குகளை அதிகளவில் காங்கிரஸ் பெறும். இது சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பது உறுதி. உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் 80 சீட்டுகளைப் பெற காங்கிரஸ் முஸ்லீம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றால் போது இதன் பின் பிராமண மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவும் தெரிவிப்பது உறுதி.

இதை எப்படிச் சரிக்கட்டப்போகிறது என்பது இக்கூட்டணிக்கே வெளிச்சம்.

இதைத் தொடர்ந்து பிஜேபி உயர் சாதி மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என இப்பிரிவு மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் நிலவி வருகிறது.

இந்நிலையில் ப்ரியங்கா காந்தியின் கணவர் உயர் சாதி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் உத்தரப் பிரதேசத்தில் பிராமண மற்றும் உயர் சமுகத்தின் வாக்குகளைக் காங்கிரஸ் பெற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் இது பிஜேபியின் வாக்கு வங்கியும் பாதிக்கிறது.

இதனால் உத்தரப் பிரசேதத்தில் காங்கிரஸ் வெற்றிபெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த வெற்றி பிஜேபி, சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்குப் பொதுத் தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here