கோவிலில் ஏன் வேண்டுதல்கள் பலிக்கின்றது என்பதற்கான காரணம்?

0
10577

ஆன்மீகமும் அறிவியலும் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது.
அந்த காலத்தில் எந்த ஒரு விஷயத்தையும் அனமீகம் தொடர்பு படுத்தியே சொல்லி வந்தனர். சாணி மெழுகி கோலம் போடுவதில் கூட அறிவியல் இருக்கின்றது.

சாணி கிருமி நாசினி. வீட்டின் முன் தெளிப்பதால் கிருமிகள் தாக்காமல் இருக்கும். அது போல், அம்மை போடும் சமயத்தில் வேப்பிலை சொருகுவது. அதனை ஆன்மீகத்துடன் தொடர்பு செய்தாலும், வேப்பிலை அம்மை உண்டாக்கும் வைரஸுடன் போராடுகிறது.

இப்படி நிறைய விஷயங்கள் ஆன்மீகத்துடன் அற்வியலை தொடர்பு படுத்திப் பார்க்கலாம் . வாங்க..

விபூதி ஏன் பூசுகிறோம்?

இந்து சமயத்தில் ஆண்கள் கட்டாயம் விபூதி பூச வேண்டும் என்ற மரபுண்டு. ஏன் சந்தனம் விபூதி பூசுகிறோம் தெரியுமா?
அருகம்புல்லை உண்ணும் பசுமாட்டின் சாணத்தை சின்ன சின்ன வறட்டியாக தட்டி நன்றாக காய வைத்து அதனை உமி போட்டு மூடி வைத்தால் வெந்து விடும். வெந்தபின் நீராக இருக்கும் அதௌதன உண்மையான விபூதி என சொல்லப்படுகிறது. நீராக இருக்கும் அதனை நெற்றியில் இட்டுக் கொள்வது பழைய கால வழக்கம்.

ஆனால் காலம் போன சுழற்றில் இப்போதெல்லாம் சணங்களுடன் வாசனை திரவியம் கலந்து கடைகளில் விற்கப்படுகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.
விபூதியை நெற்றில் இட்டுக் கொள்கிறோம். முகத்தில் நெற்றி முக்கியமான இடமாக கருதப்படுகிறது.

காரணம் நெற்றியில்தான் சூரியனிடமிருந்து அதிக வெப்பம் உறியப்படுகிறது. அந்த வெப்பத்தினால் உண்டாகும் சக்தியை உடலுக்குள் அனுப்புகிறது.
சூரியக் கதிர்களின் வெப்பத்தை சரியாக உட்கிரகித்து உள்ளே செல்ல விபூதி உதவுகிறது.

சந்தனம் இடுவதற்கு காரணம் ?

இரு புருவங்களுக்கு மத்தியில் நுண்ணிய நரம்புகள் அமைந்துள்ளது. எனவே மற்றவர்கள் செய்யும் மன வசியத்திற்கு கட்டுப்படாமல் இருக்க இரு புருவங்களுக்கு மத்தியில் விபூதியை இடுகிறார்கள்.

அது போல் சந்தனத்தை புருவங்களுக்கு மத்தியில் இடும் பொழுது ஞாபக சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள அதிக வெப்பத்தை உறிஞ்சு குளிர்ச்சியடையச் செய்கிறது.

கோவிலில் ஏன் நினைத்தது பலிக்கிறது?

அந்த காலத்தில் கோவில்களை நினைத்தை இடத்திலிலெல்லாம் கட்டவில்லை. எங்கே பூமியின் காந்த சக்தி அலைகள் அதிகமாக இருக்கின்றதோ அங்கு கட்டினார்கள்.
மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான். இதன் குறிப்பு.

இதனால் மிக அதிக காந்த சக்தியும், நேர்மறை ஆற்றலும் கோவிலுள் உள்ளது.. கோவிலுக்குள் இருக்கும் கர்ப்ப கிரஹம் பொதுவாக வட துருவமும் தென் துருவமும் இணையும் அந்த சிறிய இடத்தில் தான் இருக்கும். இதற்கு காரனம் அங்கேதான் காந்த சக்தி அபரிதமாக இருக்கும்.

மூல ஸ்தானத்தில் சிலைக்கு கீழே செப்புத் தகடுகளை வைத்து பதிக்கப்பட்டிருக்கும். இந்த செப்புத் தகடுகள் அந்த காந்த ஆற்றலை ஈர்த்து வெளியே கொண்டு வரும். எனவே அந்த இடத்தை நோக்கி நாம் கும்பிட்டு எந்த வித கவனக்குறைவு இல்லாமல் சிரத்தையுடன் வேண்டும்போது நம்முடைய எண்ணங்கள் ஆற்றலாக மாறுகிறது.

அங்கு பல பேர் ஒன்று கூடி மந்திரங்கள் சொல்ல நம்முடைய தீர்க்கமான வேண்டுதல்கள் பலிக்கின்றன.

இவ்வாறு பல வேண்டுதல்கள் பலிக்க, அந்த கோவில் பற்றிய பெருமையும் பலருக்கும் செல்ல, பிரசித்திப் பெறுகின்றது.

மேலும் கோவில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் மற்றும் கொடி மரம் சிறந்த மின் தாங்கியாக இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here