ஏன் சனிக் கிழமை ஆண்கள் தலைக்கு குளிக்க வேண்டும்?

0
867

சனி நீராடு என்பது ஆத்திச் சூடியில் அவ்வை சொன்ன விஷயம். பொதுவாக பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும் தலைக்கு குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
அறிவியல் ரீதியாகவே அந்தந்த நாட்களுக்கு தகுந்தாற் போல் கிரகங்களில் ஆதிக்கம் இருக்கும்.அதற்கேற்பவே கிரகங்களின் பெயர்களை கிழமைகளாக வைத்தோம்.

ஏன் ஆண்கள் சனிக் கிழமை தலைக்கு குளிக்க வேண்டும் ?

நம்மை போல் சூடான இந்திய மக்களுக்கு பொது வாகவே கப மற்றும் பித்த உடலாகத்தான் இருக்கும். புதன் பகவானும், சனி பகவானும் வாத கிரகங்கள் என்பதால் உடலை குளிர்ச்சியாக்குகிறது. பெரும்பாலோன ஆண்கள் வெளியில் அலைந்து திரிவதால் உடலில் பித்தம் அதிகமாக இருக்கும்.  உடலில் வெப்பம் சம நிலை பெறாமல் பித்தம் அதிகமாக இருந்தல பல வித நோய்கள் உண்டாகும். ஆகவேதான் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் தலைக்கு குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஏன் பெண்கள் வெள்ளிக் கிழமை தலைக்கு குளிக்க வேண்டும்?

அதுவே பெண்களுக்கு குளிர்ச்சி பொருந்திய வாத உடலாகத்தன இருக்கும். வாத தொஷமும் உடலுக்கு நன்மையல்ல. மூட்டு வலி, கால் குடைச்சல், எலும்பு வீக்க்ம போன்றவை வாத தோஷத்தால்தன பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகின்றன. வெள்ளிக் கிழமை சுக்கிரன் கப கிரகம் என்பதால் , பெண்களுக்கு தேவையான சூடு பெற்று உடலில் தோஷம் சம நிலை பெற்று நோய்கள் வராமல் காக்கலாம் என்பதால் வெள்ளி மற்றும் சனிக் கிழமையில் பெண்கள் தலைக்கு குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

எப்போது தலைக்கு குளிக்கக் கூடாது?

அஷ்டமி, பிரதமை, சதுர்த்தி, பௌர்ணமி,சஷ்டி, ஏகாதசி, சதுர்த்தி ஆகிய தேதிகளில் தலைக்கு குளிக்கக் கூடாது. மிக அவசியமெனில் அன்று எண்ணெயில் சிறிது நெய் கலந்து குளிக்கலாம்.

தலைக்கு குளிக்கும் போது செய்ய வேண்டியவை :

முதல் நாள் இரவில் நல்லெண்ண்யில் மிளகு, ஔர் பூண்டு பல், ஒரு வர மிளகாய், சிறிது மஞ்சள் போட்டு காய்த்து வைத்து விட வேண்டும். மறு நாள் அந்த எண்ணெயை தேய்த்து குளிக்க வ்ணூட்ம். இதுதான் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் முறையான செயல்.

குளித்த பின் செய்யக் கூடாதவை :

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த பின் அன்று முழுவதும் பகல் நேர தூங்கக் கூடடஹு. தனால் நரம்புகள் பலவீனம் ஆகும் . குளிர்ச்சியான உணவை உண்ணக் கூடாது. புளிக்காய்ச்சல், வற்றல் குஹ்ழம்பு போன்ற்றவற்றை உண்ணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here