திருமணத்திற்கு முன்பே ‘அந்த’ ஆசை வருகிறதா? இந்த 5 விஷயங்களை சரி செய்யுங்க!

0
23835

கலாச்சாரம், விழாக்கள், உணவுகள், வாழ்வியல் என அனைத்து சூழலிலும் மாற்றங்களை புகுத்தி வருகிறோம். மேற்கத்திய உணவுகள், மேற்கத்திய கலாசாரத்தின் மீதான ஈர்ப்பும் நம்மவருக்கு மிகுந்து வருகிறது. திருமணத்திற்கு முன்பாகவே லிவிங்-டு-கெதர் வாழ்க்கையை சில திரைப்படங்கள் மூலம் காட்டிவிட்டார்கள். அந்த டேஸ்ட் நம்மில் பலருக்கும் பிடித்துப் போய்விட, அப்படியே வாழத் தொடங்கிவிட்டனர். கேட்டால் நவநாகரீக உலகம் என்கிறார்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி செல்வதாக கூறி தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கின்றனர். ஆனால் இதை நவநாகரீகம் என ஒற்றைச் சொல்லுக்குள் போட்டு புதைத்து விடமுடியாது. இளைஞர்கள் அன்றாட பார்க்கும் சில விடயங்களைத்தான் அடைய நினைக்கிறார்கள். ட்ரெண்ட் செட்டிங்கை புகுத்தும் வெளிநாட்டு சீரியல்கள், சமூக ஊடகங்கள், திரைப்படங்கள் மூலமே அவர்கள் நமது பண்பாட்டிற்கு முரணான வாழ்வியல் முறையை பின்பற்ற விரும்புகிறார்கள். ஒரு இளைஞன் தனது திருமணத்திற்கு முன்பாகவே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள விரும்புவதற்கு சில காரணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

திருமணத்திற்கு முன்பே எழும் 'அந்த' ஆசைக்கு காரணம் இதுதானாம்!

#1 பெற்றோரின் கவனக்குறைவு:

ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பிறகு இளைஞர்கள் உலகத்தின் சுற்றுவேகம் தாறுமாறாக அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். காலையில் எழும் தருணம் முதல், அதிகாலை உறங்கும் வேளை வரை ஸ்மார்ட் போன் அவனது கைகளிலிருந்து விடுபட விரும்புவதே இல்லை. அதில் அவன் என்ன செய்கிறான்? யாருடன் பேசுகிறான்? எதை தேடுகிறான்? என்பதை தெரிந்து வைத்திருக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு இரண்டு பேரை தாண்டாது.

#2 தாத்தா பாட்டி இல்லை:

இன்றைய சூழலில் தத்தா பாட்டி என்பவர்கள் வீட்டுச்சூழலில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் அரவணைப்பும், வாழ்க்கைப் பாடங்களும் கிடைக்காத காரணங்களாலும் கூட ஒரு இளைஞன் தன்னுடைய கலாச்சாரத்திலிருந்து தடம் புரள்கிறான்.

#3 மேற்கத்திய ஊடகங்கள்:

இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் இன்று மேற்கத்திய காட்சி ஊடகங்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. காமத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் காட்டாத மேற்கத்திய சீரியல்களும், திரைப்படங்களுமே இன்று நம்மவரில் பாதி பேத்தை கெடுத்துக் கொண்டிருக்கின்றன. அளவுக்கு மிகுதியான ஆபாசங்களையும், அவைகளை மிக மிக சாதாரண காட்சிகளாகவும் காட்டுவதைக் கூட நவநாகரீகம் என சொல்லிவிட்டு பார்க்கக் கூடிய ஆட்கள் உருவாகி வருகின்றனர்.

திருமணத்திற்கு முன்பே எழும் 'அந்த' ஆசைக்கு காரணம் இதுதானாம்!

#4 சேர்க்கை சரியில்லை:

ஆரம்பக்கால காம உணர்ச்சிகளுக்கு தீனி போடும் விதமாக முன்பெல்லாம் பசங்க சைட் அடித்து, தாகத்தை தீர்த்துக் கொள்வார்கள். அதையே குற்றம் என உரைத்தது முன்னோர் சமூகம். ஆனால் இன்றெல்லாம் பசங்க பெண்களை சைட் அடிப்பதில்லை. பகலோ இரவோ எதுவாய் இருந்தாலும், கட்டிலை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘இந்த வயசுல இதெல்லாம் பண்ணலன்னா எப்படி டா?’ என்ற சக நண்பனின் அநாகரீக கேள்விதான் நவநாகரீகமாம்.

#5 கற்புனா என்ன? கிலோ எவ்வளவு?

சென்னையில் உள்ள பாதி பெண் பிள்ளைகளுக்கு இந்த சந்தேகம் இருப்பதை படம்பிடித்துக் காட்டியிருந்தது ஒரு பிரபல YouTube Channel. கற்பினைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு சரியான கற்றலை வழங்காததன் விளைவுதான். இது ஆண்களுக்கும் பொருந்தும். ஏனெனில் ஆண்களுக்கும் கற்பு உண்டு.

இத்தகைய காரணங்களாலே ஒரு வாலிப உள்ளம் திருமண மேடைக்கு முன்பாக கட்டிலைத் தேடி அலைந்துத் திரிகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் மேற்கூறிய குறைகளை சரி செய்துவிட்டாலே எல்லாம் சரியாகிவிடும்.

பொங்கலன்று இதை வீட்டு வாசலில் வைப்பதற்கு காரணம் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here