காணாமல்போன வர்மா.. படம் வெளி வருமா..? வராதா..?

0
1663

தெலுங்கில் வெற்றிபடமாக வரலாற்றில் பதிவான அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் ரீமேக் செய்யத் திட்டமிட்ட இயக்குனர் பாலா, விக்ரம் மகன் துருவ்-ஐ இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்ய விக்ரம் மற்றும் பாலா முடிவு செய்தனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் டீசரை வெளியான பின்பு படத்தை ரீமேக் செய்கிறோம் என்ற பெயரில் ஸ்பூப் படம் எடுக்கப்பட்டுள்ளது என்கிற தொனியில் பல கடுமையான கருத்துக்கள் சமுக வலைதளத்தில் பரவியது. அர்ஜூன் ரெட்டி படத்துடன் வர்மா படத்தை ஒப்பிட கூட முடியாது என்கிற நிலையில் தான் படத்தின் டீசர் இருந்தது.

பல சினிமா கனவுகள் உடன் நடிகர் விக்ரம் மகன் துருவ் இப்படத்தில் முதல் முறையாக நடித்திருந்த நிலையில் படம் குறித்த விமர்சனங்கள் துருவ் மற்றும் சியான் விக்ரம் ஆகியோரை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் வர்மா படக்குழுவினர் இப்படம் குறித்து எவ்விதமான அறிவிப்புகளையும் வெளியிடாமல் அமைதியாகிவிட்டனர் என்றே சொல்லலாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், படத்தை வெளியிட எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, வெளியீடு தேதி கூடப் படக்குழுவினர் இதுவரை அறிவிக்கவில்லை.

இதேவேளையில் அர்ஜூன் ரெட்டி படம் தற்போது பாலிவுட்-இல் கபீர் சிங் என் பெயரில் உருவாகி வருகிறது மட்டும் அல்லாமல் படத்தின் செய்திகள் தொடர்ந்து சினிமா செய்திகள் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது, இப்படம் தற்போது ஹிந்தியில் ஷாஹித் கபூர் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் வர்மா படம் வெளிவராது என்ற கருத்து நிலவி வருகிறது, இதற்கு இயக்குனர் பாலா தான் பதில் சொல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here