பெண்கள் வளையல் அணிவதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?

0
1068

பெண்களுக்கு என்றால் வளையல், மூக்குத்தி, தோடு, நெத்திச்சுட்டி, அட்டி என ஏராளமான ஆபரண அணிகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த அணிகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் சுவாரசியமான காரணங்கள் இருக்கின்றன.

வளையல் அணிவதிலும் கூட பெண்களுக்கு சில அபூர்வ பலன்கள் அடங்கியிருக்கிறது. ஆனால் இன்றெல்லாம் பெண்கள் பெரும்பாலும் வளையல் அணிவதில்லை. ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் அணிகிறார்கள். நகரங்களில் வளையல் என்பது ஃபேஷன் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டு பல யுகங்கள் ஆகிவிட்டன.

 

தேவி தத்துவம்:
கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத் தன்மை மற்றும் சைதன்யம் போன்ற அதியற்புத தன்மைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றை அணிந்து கொள்ளும்போது, எழும் ஓசை சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. தீய சக்திகளை விரட்டியடித்து பெண் தேவதையின் அருளை ஈர்க்கும் சக்தி இந்த சாத்வீக-சைதன்ய அதிர்வலைகளுக்கு உண்டு.

 

வளைகாப்பு:
பெண்களுக்கு வளைகாப்பு என்ற சுபநிகழ்ச்சி இந்தியா முழுவதும் பண்டைய காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல் அணிவிப்பது மட்டுமின்றி, அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் எல்லா வயது பெண்களுக்கும் வளையல்கள் சீராக கொடுக்கப்படும். கர்ப்பிணிப் பெண் மெல்ல நடந்துவரும் உடல்வாகை கொண்டிருப்பாள். அவள் வரும்போது வளையோசை சத்தம் கேட்கும். இதனால் அவள் வருவதை புரிந்துகொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மற்றவர் ஒதுங்கிச் செல்வர்.

 

கண்ணாடி வளையல்:
கண்ணாடி வளையல்களில் விரிசல் அல்லது உடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை அணியக்கூடாது. உடனடியாக கைகளிலிருந்து அகற்றிவிட வேண்டும். ஏனென்றால் உடைந்த வளையல்களில் சாத்வீக-சைதன்ய சக்திகள் செயலற்று போகும். இதனால் அந்த வளையல்களை அணிவதன் மூலம் எந்தவித காப்பு சக்திகளும் கிடைக்காது. டெல்லி நகரத்து பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஹேண்ட்பேக்கில் வைத்திருக்கும் சிறு கத்தி போன்று, நம் இளம்பெண்களின் பாதுகாப்பு கவசமாகவும் கூட கண்ணாடி வளையல்கள் திகழ்கின்றன.

 

நிறங்களின் பலன்கள்:

  1. பச்சை நிற வளையல்கள் அணிவது சிறப்பானது. இந்நிறத்தில் அணிவதால் மன நிம்மதி, மகிழ்ச்சி கிடைக்கும்.
  2. சிவப்பு நிற வளையல் தீ சக்திகளை விரட்ட வல்லது. காப்பு சக்திகளை அதிகம் கிரகிக்கக்கூடிய ஆற்றல் இந்நிறத்திற்கு உண்டு.
  3. ஜிகினா வேலைப்பாடுகள் கொண்ட வளையல்கள் இதுபோன்ற காப்பு சக்திகளை ஈர்க்காது என்பதால் அவற்றை தவிர்ப்பது நன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here