உவ்வேக்! இதையெல்லாமா சாப்பிடுவாங்க? ஆனா மாட்டுப் பாலை விட 3 மடங்கு சத்து!

0
45

பாம்பு, பூச்சி, பூரான், என ஒரு ஜந்துவையும் விட்டு வைக்காம சாப்பிடறவங்க நிறைய இருக்காங்க. குறிப்பா சீனா, ஜப்பான் தாய்லாந்து போன்ற நாடுகளில் நம்மஊர் ஊறுகாய், அப்பளம் மாதிரி இதையெல்லாம் சாப்பிடுவாங்க

அதையெல்லாம் அவர்கள் டேஸ்டிற்காக சாப்பிட்டாலும் அதில் சத்துக்கள் இருக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் அவங்க கண்டுக்க மாட்டாங்க.

அப்படித்தாங்க இப்போ புதுசா இன்னொரு விஷயம் கண்டுபிடிச்சிருக்காங்க. என்ன தெரியுமா? கரப்பான் பூச்சி. அதுவும் சூப்பர் ஃபுட் என உலகளவில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை வெளியிட்டிருக்கிற அறிக்கையில் கரப்பன பூச்சியும் சூப்பர் ஃபுட்னு சொல்லியிருக்காங்க.

இருங்க. அதுக்காக, அவசரத்துல வீட்ல ஓடிட்டு இருக்கிற கரப்பான் பூச்சியை எடுத்து வறுத்து சாப்பிட்டுடாதீங்க. என்னன்னு விவரமா தெரிஞ்சுக்க முழுசா கட்டுரையை படிங்க.

கரப்பான் பூச்சிப் பால் :

பசிஃபிக் தீவுகள்ல குறிப்பா ஹவாய் போன்ற தீவுகள்ள இருக்கிற கரப்பான் பூச்சிகள் மற்ற கரப்பான் பூச்சிகளைப் போல் முட்டை இடாது. குட்டி போடும். குட்டிகளை ஈன்றபின் எல்லா பாலூட்டிகளைப் போல் அதுவும் பால் சுரக்கும்.

அந்த பால் நாம் குடிக்கும் மாட்டுப்பாலை விட மூன்று மடங்கு அதிக சத்து உள்ளதாம். கேட்கவே ஆச்சரியமா இருக்குல்ல.

பால் என்றால் தண்ணி போல் திரவமா இருக்காது. அது ஒரு க்ரிஸ்டலாகத்தான் உருவாகும். அந்த க்ரிஸ்டல் மிக அதிக ப்ரொட்டின் கொண்டதாம்.

அதிக சத்துக்கள் :

அந்த க்ரிஸ்டலில் முழுப் ப்ரொட்டின், கொழுப்பு, சர்க்கரை போன்ற அத்யாவசியமான சத்துக்களைக் கொண்டதாம். எனவேதான் உலக உணவு மையம் இதனை சூப்பர் ஃபுட் என அறிவித்துள்ளனர். ஆகவே மார்க்கெட்டில் இந்த வகையான கரப்பபான் பூச்சிகளில் பாலிற்கு ஏக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. விற்பனைக்கும் வந்துள்ளது.

கிரிக்கெட் பூச்சி :

கரப்பான் பூச்சி மட்டுமல்ல ஈசல், கிரெக்கட் போன்ற பூச்சிகள் அதிக புரதம் கொண்டவை அவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது என
உணவு வல்லு நர்கள் கூறுகின்றனர்.

ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி கூட , அவரின் குழந்தைகளுக்கு மாலை ஸ்நேக்ஸிற்கு கிரிக்கெட் பூச்சி வறுவலைத்தான் தருவதாக குறிப்பிட்டிருந்தார். காரணம் இந்த மாதிரியான பூச்சிகளில் 80 சதவீதம் புரதம் இருக்கின்றதாம். அதோடு, விட்டமின்கள், மோனோ சேச்சுரேட்டட் கொழுப்பு, மினரல்கள் போன்றவை கொண்டுள்ளது.

வண்டு :

தாய்லாந்து, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் சில இடங்களில் உணவுப் பஞ்சத்தால் வண்டு ஈசல், கிரிக்கெட் போன்ற பூச்சிகளை வறுத்து சாப்பிட்டு மூன்று நேரத்தையும் போக்குகிறார்கள். சாலையோரங்களில் திண்பண்டங்களைப் போல் இவற்றை வறுத்து
விற்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here