உங்களுக்கு பிரவுன் நிறக் கண்களா? அப்போ இது உங்களுக்குதான்!!

0
163

பிரவுன் நிறக் கண்கள் அழகு மட்டுமல்ல, அவர்களுக்கென்று தனித்தன்மையான
குணங்களும் இருக்கிறதாம்.

மனிதர்களின் கண்களின் நிறத்தைக் கொண்டு பல ஆய்வுகள் மன நலம் தொடபான
படிப்புகள் வெளியிட்டிருந்தன. அவைகளில் இதுவும் ஒன்று. பிரவுன் நிற கண்கள்
வைத்திருப்பவர்களின் குணாதிசயங்கள் என்ன என்று சொல்லப்பட்டுள்ளது.

ரொம்பவும் ஸ்பெஷல் :

பிரவுன் கண்கள் கொண்டவர்கள் மிகவும் ஸ்பெஷலாகவும், தனித்தன்மை
கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நம்பிக்கையின் மறு உருவமாக
இருப்பார்களாம். அவர்களின் எதையும் நீங்கள் சொல்லலாம்.

தன்னம்பிக்கை :

மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள். எந்த தருணங்களிலும் தங்களுடைய நம்பிக்கையை தகர்க்காமல் முன்னேறிச் செல்பவர்கள்.

உணர்ச்சிவசப்படுதல் :

எளிதில் உணர்ச்சி வசப்படுவதுதான் இவர்களின் மைனஸ் பாயின்ட். சட்டென்று கோபமோ, அழுகையோ கொட்டித் தீர்ட்துவிடுவார்கள்.

பரந்த மனசு :

இந்த கண்கள் கொண்ட ஆண்கள் பரந்த மனசுக்காரகளாக இருப்பார்கள். பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணை மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்களாம்.

புத்தகங்கள் :

இவர்கள் புத்தகப்பிரியர்களாக இருப்பார்கள். நிறைய வாசிப்பு அனுபவங்களை
பெற்றிருப்பார்கள்

ரகசியங்கள் :.

நிறைய ரகசியகளை கொண்டவர்கள். எதனையும் வெளிப்படையாக சொல்லி விட
மாட்டார்கள். அவர்களிடம் சொன்ன ரகசியங்களும் கடலுக்குள் போட்ட மாதிரி. வெளியில் சொல்ல மாட்டார்கள்.

நெஞ்சம் மறப்பதில்லை :

எளிதில் எதனையும் மறக்க மாட்டார்கள். துரோகமோ , நன்மையோ அவர்கள் என்றும் நெஞ்சில் வைத்திருப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here