ரகுவை கொன்றது யார்? ஹைகோர்ட் அதிரடி நடவடிக்கை!

0
133

கோவையில் ரகு என்ற இளைஞர் கட்சிக்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி உயிரிழந்தார் என பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் கோவை நகர காவல் துறையினர் ரகு சாலை விபத்தில் தான் இறந்தார் என தெரிவித்துள்ளனர்.

ரகுவை கொன்றது யார்? ஹைகோர்ட் அதிரடி நடவடிக்கை!

மேலும் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளது என்றும் கூறியது. அது தொடர்பாக லாரி ஓட்டுனர் ஒருவரையும் போலிஸார் கைது செய்தனர். இதை கண்டிக்கும் வகையில்  WHO KILLED RAGU? என்ற வாசகம் சாலையில் எழுதப்பட்ட சிறிது நேரத்திலே உடனடியாக காவல் துறையினரால் அளிக்கப்பட்டது.  இந்நிலையில் இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ரகுவை கொன்றது யார்? ஹைகோர்ட் அதிரடி நடவடிக்கை!

ரகு உயிரிழப்புக்கு அலங்கார வளைவு தான் காரணம் என தெளிவாக தெரிகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.மேலும் அலங்கார வளைவுதான் காரணம் என்றாலும் விசாரணைக்குள் செல்ல விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கோவையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்அவுட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சாலையை மறைத்து பேனர்கள் வைக்க அதிகாரிகள் அனுமதிப்பது எப்படி என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் விதிகளை மதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கடுமையாக சுட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here