யார் இந்த வடசென்னை அன்பு- வீடியோ

0
2678

வடசென்னை, தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு முக்கியமான படம். வட சென்னை மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டும், அப்பகுதி மக்களின் வாழ்வியல் பற்றிய மெகா சைஸ் படம் தான் வடசென்னை.

பல்வேறு தடைகளை தாண்டி இப்படத்தை தனுஷ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இப்படம் பல்வேறு உண்மை சம்பவங்களின் கோர்வை என்றும் வெற்றிமாறன் கூறியுள்ள நிலையில் இப்படத்தின் மீதான ஈர்ப்பு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படக்குழுவினர் படத்தை விரைவாக வெளியீட திட்டமிட்டு வரும் நிலையில் இப்படம் குறித்த வீடியோக்கள் மற்றும் அறிவிப்புகளை அவ்வபோது வெளியிட்டு வருகின்றனர்.

அக்டோபர் 17ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான அன்பு யார் என்ற பெயரில் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த கதாப்பாத்திரத்தில் தான் தனுஷ் நடிக்கிறார். அந்த வீடியோ உங்களுக்காக.

இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ரியா, சமுத்திரகனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here