அடுத்த பிரதமர் யார்..? முடிவு இவர்கள் கையில்..!

0
330

அடுத்தச் சில மாதங்களில் நடக்க உள்ள பொதுத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் போராடி வருகிறது, இதற்கிடையில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாகப் பிஜேபி கட்சி கடந்த 4.5 வருடத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்துள்ள நிலையில் 2019 பொதுத் தேர்தலில் மீண்டும் மோடியை முன்னிறுத்து ஆட்டத்தைத் துவங்க வேண்டுமான என்ற முக்கியமான முடிவை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

மறுபுறம் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல், சோனியா ஆகியோர் பிரதமராக நிற்க முடியாதென்று பல சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார் நியமிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாகப் ப.சிதம்பரத்தை நிறுத்தவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் எனப் பல கட்சிகள் இணைந்துள்ள நிலையில் 3ஆம் அணித் தலைவராக மாயவதி அல்லது மம்தா பேனர்ஜி-ஐ பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் எனப் பேச்சப்பட்டு வருகிறது.

எது எப்படி இருந்தாலும் மக்கள் தங்களுக்கு நம்பிக்கையானவர்களுக்கும், பிடித்தமானவர்களுக்கும் தான் வாக்குகளைச் செலுத்துவார்கள். இது ஒரு புறம் இருந்தாலும் எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த வரும் பொதுத் தேர்தலின் போது சுமார் 1.8 கோடி பேர் முதல் முறையாகத் தங்களது வாக்குகளைச் செலுத்தப்போகிறார்கள்.

இவர்கள் அனைவரும் இளைய தலைமுறை, பல அரசியல் பிரச்சனைகள், கலாச்சாரப் பிரச்சனைகள் இணையத்தின் வாயிலாகவும் உரிமைக்கான போராட்டத்தைக் களத்தில் நின்றும் பார்த்தும் போராடியும் உள்ளனர்.

பிற எந்தத் தலைமுறையும் பெறாத பக்குவத்தையும், வெளியுலக அறிவையும் இத்தலைமுறை பெற்றுள்ளது. ஆக அவர்களைக் கவர்வது என்பது சாதாரணக் காரியமில்லை.

சொல்லப்போனால் 1.8 கோடி ஓட்டு அவர்களின் ஓட்டு அடுத்தப் பிரதமரை நிர்ணயம் செய்யும் அளவிற்கு சக்தி வாய்ந்தது என்றால் மிகையில்லை.

நீங்கள் முதல் முறையாக வாக்கு அளிக்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் வாக்கு யாருக்கு…?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here