ருத்ராட்சை யாரெல்லாம் அணியக்க்கூடாது? அப்படி அணிந்தால் என்னாகும்?

0
687

நிறைய சர்ச்சைகள் ஆன்மீகம் தொடர்பாக பார்த்திருக்கிறோம். ஓம் படத்தை உடையில் அணிய்க் கூடாது. ருத்ராட்சையை போடக் கூடாது. கடவுள் உருவத்தை டாட்டுவாக வரையக் கூடாது என்று கட்டுப்பாடுகள் நிறைய இருக்கின்றது.

இதில் ருத்ராட்சை அணிவதால் பலவித நன்மைகள் கிடைக்கும் என பெரும்பாலோனோர் அறிந்திருப்பார்கள். ஆனால் அதனை பெண்கள் அணியக் கூடாது? மணமானவர்கள் அணியக் கூடாது. என விதிமுறகளை சிலர் சொல்கிறார்கள், சிலர் மறுக்கிறார்கள். இதில் எது உண்மையென தெரிந்து கொள்ளலாம்.

சிவன் :

புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு.

ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.
ருத்ராட்சை யாரெல்லாம் அணியக் கூடாது> யாரெல்லாம் அணியலாம்.

யாரெல்லாம் அணியலாம்?

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய மாதவிலக்கு சமயத்தில் கூட அணிந்திருக்கலாம். இதனால் தவறில்லை.  சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால்  போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.

நன்மைகள் :

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.

முடக்குவாதம் :

இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.

சீரான ரத்த ஓட்டம் :

சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு.

இப்படி பொதுவான நன்மைகளை அனைவருக்கும் தருவதால் யாரும் ருத்ராட்சை அணிந்து பலன் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here