எந்த ராசியில் பிறந்த ஆண்களை, பெண்கள் துரத்தி காதலிப்பார்கள் என தெரிஞ்சுக்கனுமா? இதப்படிங்க

0
252

பெண்கள் அத்தனை எளிதில் ஆண்களிடம் தானாகவே முன்வந்து பேசிவிட மாட்டரகள்.
ஆண்கள்தான் வலிய வந்து பேச வேண்டும் என்ற ஒரு எண்ணம் பெண்களுக்கு இருக்கும்.

ஆனால் சிலருக்கு பிறப்பிலேயே யோகம் இருக்கும். அவர்களை எப்போதும் பெண்கள்
கூட்டம் மொய்க்கும். ஈகோ ஏதுமில்லாமல் பெண்களே வலிய போய் அவர்களுடன் நட்பு பாராட்ட முனியவரகள். துரத்தி காதலிப்பார்கள். அப்படி இருப்பவர்களைத்தன காதல் மன்னன் என்று சொல்கிறோம்.

அப்படி ஒரு யோகம் அவர்களின் ஜாதக கட்டத்தில் மட்டுமல்ல, அவர் பிறந்த ராசியிலும் கூட இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ எந்த ராசியில் பிறந்தவர்கள் காதலில் கண்ணனாக இருப்பார்கள் என பார்க்கலாம்.

டாப்-1 :

மிதுனம் :

மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் பார்ப்பதற்கு வசீகரமான தோற்றத்தை கொண்டவர்கள்.
அவர்களில் ஒரு பார்வையிலேயே பெண்களை ஈர்க்கக் கூடியவர்களாகவும்
இருப்பார்களாம். இவர்களைச் சுற்றி எப்பொழுதும் அன்பையும், காதலையும் பொழியும்
பெண்கள் இருப்பார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்களாகவும், தனது
பேச்சுத் திறனால் அனைவரையும் கவரக் கூடியவர்களாகவும், பெண்களின் மனதைப்
படிக்க தெரிந்தவர்களாகவும் இருப்பார்களாம்.

டாப்- 2 :

சிம்மம்:

அடுத்த இடத்தில் இருப்பது சிம்ம ராசி ஆண்கள். மற்றவரைப் புரிந்து நடப்பதிலும்,
உறவுகளை வலுப்படுத்துவதிலும் இவர்கள் கெட்டிக்காரர்கள். இயற்கையாகவே சிம்ம
ராசியில் பிறந்தவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்கள். அவர்களின் பேச்சு கணீரென்று
இருக்கும். அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு சொல்ல முடியாதபடி அவர்களின் பேச்சு
இருக்கும்..

டாப்-3 :

துலாம்:

பெண்களுடனான உறவுகளை இவர்கள் மதித்து நடப்பதைப் பார்த்தே பல பெண்கள்
இவர்களை விரும்புவார்கள். பேச்சுத் திறமையும் இவர்களுக்குக் கொஞ்சம் அதிகம்
தானாம். மேலும் இவர்கள் காதலிக்கும் பெண்ணை மற்றவர்கள் பொறாமைப்படும்
அளவிற்கு உள்ளங்கையில் வைத்துத் தாங்குவார்களாம்.

இவர்களிடம் பேசினால் அனைத்தையும் மறந்து இவர்களது பேச்சிற்கே அடிமையாகி
விடுவோமாம். இதுவே இந்த ராசியைப் பெண்களை கவரும் ராசிகளின் பட்டியலில் இடம் பெற வைத்துள்ளது.

டாப்-4 :

மேஷம்:

மேஷ ராசி ஆண்கள் அனைவரையும் கவரும் முக அமைப்பும், உடல் தோற்றமும்
கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய இந்த வசீகரமே பல பெண்களை
இவர்களை நோக்கி இழுக்கும்.

இவர்கள் ஒரு தலை சிறந்த காதலர்களாக இருப்பார்கள். ரசித்து ரசித்துக் காதல் செய்யக் கூடியவர்கள் மற்றும் அதிகம் தன்னம்பிக்கை கொண்டவர்களும். மேஷ ராசி ஆண்கள் கவர்ச்சிகரமானவர்களாக மட்டும் இல்லாமல் புத்திசாலிகளாகவும் இருப்பவர்கள், பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் என்பதால் பெண்கள் அவர்களின் கடைக்கண்பார்வையில் விழுவது உறுதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here