எந்த தேதில பிறந்த பெண்கள் லவ்ல பெஸ்ட் தெரியுமா?

0
3980

ஒருவர் பிறந்த தேதியின்படி வேறொருவரை வசீகரிக்க முடியும். அந்தந்த மாதங்களில் அந்தந்த தேதிகளிக்ல் பிறப்பவர்களுக்கு பொதுக் குணமென்று இருக்கும்.

அதன்படி அவ்வாறு பிறப்பவர்களுக்கு வேறொருவரின் மீது அவர்களின் ராசிப்படி காதல் பிறக்கும். காதல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. சிலபேர் மிகத் தீவிரமாக காதலிப்பார்கள். இன்னும் சிலர் விளையாட்டுத்தனமாக காதலிப்பார்கள்.
பொழுதுபோக்கிற்காகவும் காதல் செய்பவர்கள் உண்டு.

 

இப்படி மனிதர்க்கு மனிதர் காதல் வேறுபடுவது கூட அவர்களின் ராசிப் படியோ,
பிறந்த தேதியின் படியோ இருக்கலாம். அப்படி லவ் பண்றதுல்ல எந்த தேதில பிறந்த பெண்கள் பெஸ்ட்ன்னு தெரிஞ்சுக்கனுமா? இந்த கட்டுரையை முழுசா படிச்சுப் பாருங்க.

டாப்- 5 :

டிசம்பர் 22- முதல் ஜனவரி19 வரைல பிறந்தவங்க அஞ்சாவது இடத்தை பிடிச்சிருக்காங்க. இவங்க லவ்வர்க்கு உண்மையானவங்களா
இருந்தாலும், முதல்ல குடும்பதுக்கும், கலாச்சாரத்துக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. தன்னை சுற்றியுள்ள குடும்பத்தினருக்காக காதலையும் விட்டுக் கொடுத்துடுவாங்க. ப்ராக்டிகலா இருக்கத்தான் விரும்புவாங்க. அதிக பொறுப்புணர்ச்சியுடன் இருப்பாங்க.

நம்மால மத்தவங்க பாதிக்கக் கூடாதுன்னு நினைப்பாங்க. அதே சமயம் அவர்களின் காதலையும் குறைச்சு மதிப்பிடாதீங்க. தங்களோட இணையை
பொத்தி பாதுகாப்பாங்க.

Happy family standing on the beach at the sunset time. Parents hold in the hands inscription “Family”. Concept of happy family.

டாப்-4

செப்டெம்பர் -22 முதல் அக்டோபர் 22 வரையில் பிறந்தவங்க காதலையும், காதலிக்கப்படுவதையும் மிகவும் விரும்புவார்கள். அவர்கள்
மிகவும் ஃப்ரெண்ட்லி மற்றும் எல்லாவற்றையும் தங்கள் லவ்வருடன் பகிர்ந்து கொள்வார்கள்.

காதலிக்கப்படுவதற்கு எல்லையில்லை என்று நினைப்பவர்கள். அதனால சந்தேகம் வேண்டாம். இந்த தேதில பிறந்தவங்களை நீங்கள் காதலித்தால் நீங்கள் சிறந்தவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.

டாப்-3 ;

ஏப்ரல்19- முதல் மே-20 வரை பிறந்தவர்கள் தங்கள் காதலில் நேர்மையானவர்கள். அவர்கள் யாரை காதலிக்கிறார்களோ அவர்களை எப்போதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைப்பார்கள். இந்த தேதியில் பிறந்த பெண்கள் சின்ன சின்ன பரிசுகளை தங்கள் காதலருக்கு பரிசளிப்பார்கள்.அவர்களைப் போல் அவர்களுடைய காதலர்களிடம் யாரும் அவர்கள் அளவிற்கு அக்கறை கொள்ள மாட்டார்கள்.

டாப்-2 :

ஜூன்22 முதல் ஜூலை 22 வரை பிறந்த பெண்கள் தங்கள் காதலருக்காக எதையும் செய்வார்கள். அவர்களுடைய தாய்மையுணர்வு, கற்பனைத் திறன், உணர்வுகள் எல்லாமே ரசனை மிகுந்தவை. தங்கள் காதலர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதைத்தான் விரும்புவார்கள். இந்த தேதில பிறந்தவங்க உங்க சிறந்த பார்ட்னராக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

டாப்-1 :
மார்ச்-20 முதல் ஏப்ரல் 19 வரை பிறந்தவங்கதான் காதலிப்பதில் கில்லாடி. அவர்கள் அத்தனை எளிதில் காதலில் விழ மாட்டார்கள் என்றாலும், அவர்கள் காதலித்ததும் அவர்களின் ரசனைகள் வெற லெவலில் இருக்கும். அவர்களுடைய ப்ரைவசியையும் மிக பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். இந்த தேதியில் பிறந்த பெண்களை காதலிப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here