மிகப்பெரிய பணக்காரர் ஆகும் யோகம் எந்த இராசிக்கு எல்லாம் இருக்குனு தெரியுமா?

0
293

பணம் என்பது இன்று நமக்கு மிக முக்கியமான விஷயமாக மாறிவிட்டது. நமது வாழ் நாளில் மிகப்பெரிய ஒரு பாதியினை நாம் பணம் சம்பாதிப்பதற்காகவே செலவிடுகிறோம்.. இந்த உலகில் மிகப் பெரிய பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு தான் இல்லாமல் இருக்கும்?

ஆனால் உண்மையான பணக்காரன் யார் என்றால், எவன் ஒருவர் இருப்பதை வைத்துக் கொண்டு மன நிம்மதியுடன் வாழ்கிறானோ அவனே மிகப் பெரிய பணக்காரன் ஆவான். ஒரு ஏழை தனக்கானது இவ்வளவு தான் என்று தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்கிறான்.

ஆனால் ஒரு பணக்காரன் தான் பணம், பணம் என்று அலைந்து கொண்டே இருக்கிறான். உண்மையில் ஒருவன் பணக்காரன் ஆக வேண்டும் என்றால், சரியான நேரத்தில் தோன்றும் சரியான யோசனையும், கடின உழைப்பும், கொஞ்சம் அதிஷ்டமும் மிக மிக அவசியமாகும். அந்த வகையில் மிகப் பெரிய பணக்காரர் ஆகும் யோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இருக்கிறது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. ரிஷப இராசிக்காரர்கள்

ஏப்ரல் 20 – மே 20 வரையிலான கால கட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இந்த பலன் பொருத்தமாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் மிகச்சிறந்த நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள். மற்றவர்களால் ஆகாத காரியத்தை கூட இவர்களால் செய்து முடித்து விட முடியும்.

கிடைப்பது வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் சரி என்று முயற்சி செய்து பார்த்து விடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு பணமும் தனது சொந்த வியற்வையினால் உண்டானது ஆகும். ஆனால் இவர்கள் அதிகமாக பணம் செலவு செய்பவர்களும் கூட.. இவர்கள் சேமிப்பில் சற்று கவனம் காட்டினால், வாழ்க்கையில் மிகச்சிறந்த நிலைமைக்கு வருவார்கள்.

2. கடக ராசிக்காரர்கள்

21 ஜூலை – ஜூலை 22 வரையிலான கால கட்டத்திற்குள் பிறந்தவர்களுக்கும் இந்த பலன் பொருந்தும். கடக ராசிக்காரர்கள் மற்றவர்கள் அதிகமாக நேசிப்பார்கள். மேலும் அவர்களின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். கடக ராசிக்காரர்கள் தனது குடும்பத்தை திருப்திப்படுத்த வேண்டும். அவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் அதிக கவனமாக இருப்பார்கள்.

கடக ராசிக்காரர்கள் தங்களது வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலேயே தங்களது மீதி வாழ்க்கைக்கு தேவையான செல்வத்தை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் இவர்கள் தங்களது நிதி நிலைமை பற்றி கட்டாயமாக மற்றவர்களுடன் ஆலோசனை நடத்த கூடாது.

3. சிம்ம இராசிக்காரர்கள்

23 ஜூலை – 22 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இந்த பலன் பொருத்தமாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்கள் மிகச் சிறந்த செல்வ வளம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களது பிறப்பு ஏழ்மையில் ஆரம்பித்தாலும் கூட, இவர்களது வாழ்க்கையானது செல்வ செழிப்புடன் இருக்கும்.

இவர்கள் தங்களது சொந்த முயற்சியினால் செல்வந்தராவது என்பது உறுதி. இவர்களுக்கு தலைமை பண்பு அதிகமாக இருக்கும். தங்களது நிதி நிலையை எப்படி கையாழ்வது என்பது தெரிந்து வைத்திருப்பார்கள். ரிஸ்க் எடுக்க தயக்கம் காட்டாதவர்களாக இருப்பார்கள்.

4. கன்னி இராசிக்காரர்கள்

23 ஆகஸ்ட் – 22 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இந்த பலன் பொருத்தமாக இருக்கும். கன்னி ராசிக்காரர்கள் மிகச்சிறந்த நிர்வாக திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் தீர்க்கமாகவும், தெளிவாகவும் இருக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு ரியல் எஸ்டேட் பிஸினஸ் மிக சிறந்த தொழிலாக இருக்கும்.

5. விருச்சிக இராசிக்காரர்கள்

23 அக்டோபர் – 21 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கும் இந்த பலன் பொருத்தமாக இருக்கும். இவர்கள் பல விஷயங்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் விருச்சிக ராசிக்காரர்கள் சிறந்த செல்வந்தர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கு பார்த்து பார்த்து செலவு செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு சில சமயங்களில் தாராளமாகவும் செலவு செய்வார்கள்.

எப்போதும் எப்படி எளிமையான முறையில் பணம் ஈட்டலாம் என்பது பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் தாங்கள் விரும்பிய பாதையில் தான் செல்வார்கள். மேலும் இவர்கள் சென்ற பாதையில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு எந்த வழியிலாவது செல்வம் வந்து கொண்டே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here