எப்போது எந்த பழம் சாப்பிட்டால் எந்த உறுப்புக்கு நல்லது?

0
673

பழங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான உணவாக உள்ளது என்று தெரியும். பழங்கள் நோய் தடுப்பு காரணியாகவும் ஆரோக்கியத்திற்கான சக்தி நிறைந்தவையாகவும் உள்ளன. ஆனால் எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

காலையில் சாப்பிடுவதன் பயன்கள்:

காலையில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெறும் வயிற்றில் வாழைப்பழம், உலர்ந்த பழ வகைகள் சாப்பிடுவது மேலும் நன்மை தரும். வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுகள் காலைக்கடன் மூலமாக வெளியேறிவிடும்.

பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பதை காட்டிலும் கடித்து சாப்பிடுவது மேலும் ஆரோக்கியம் தரும். கடித்து சாப்பிடுவதால் செரிமாண தொந்தரவுகள் வராது.

காலையில் பழங்களை சாப்பிடுவதால் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பாகவும் இருக்க செய்யும். பழத்தின் முழுமையாக சத்தும் கிடைத்து நமது ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.

சாப்பிட்ட பின்:

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவது தான் மிகவும் சரியானது.

உணவு சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடக் கூடாது. அது பல பிரச்சனைகளை கொண்டு வரும். உணவு சாப்பிடுவதற்கு முன் பழங்களை சாப்பிடுவது தான் சிறந்தது என்று மருத்துவர்களும் கூறுகின்றனர்.

நீங்கள் சாப்பிட்ட உணவுடன் பழமும் அதனுடன் சேர்ந்து அமிலமாக மாறி வயிறு உப்பும். பழத்தின் சத்து அனைத்தும் வீணாகி விடும் என்று பல ஆய்வுகளின் முடிகளில் தெரிவித்துள்ளன.

காலையில் பழங்களை மட்டும் சாப்பிடுவதால் உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு மட்டுமில்லாமல் பொலிவுடனும் இருக்க உதவுகிறது. பழங்களை போல் நம்மை வேறு எதும் அழகாக மாற்றதாது.

பழங்களின் பயன்கள்:

திராட்சை பழத்தை சாப்பிட்டால் உடலில் வறட்சி ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். குரல் வளம் இனிமையாகும். மலச்சிக்கல் தீரும். உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் திராட்சை பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை காலையில் உண்பது  தான் மிகவும் சரியானது. ஆப்பிள் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான க்யூயர்சிடின், முழுமையாக பெற முடியும்.

மாதுளை பழத்தினை  இதயம் மற்றும் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். மாரடைப்பு, நெஞ்செரிச்சல், இரத்த கொதிப்பு, அல்சர் போன்றவற்றை வராமல் தடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here