2018 முதல் சேவையை நிறுத்துகிறது வாட்ஸ்அப்!

0
3964

ஸ்மார்ட் போனில் என்றால் கண்டிப்பாக வாட்ஸ்அப் செயலியும் இருக்கும் தற்போது அனைவரும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பும் வசதி. வாய்ஸ் கால், வீடியோ கால் என பல சிறப்பு அம்சம் கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலி ஒரு சில போன்களில் தற்போது அதன்சேவையை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி பிளாக்பெரி ஓ.எஸ், பிளாக்பெரி 10 மற்றும் விண்டோஸ் போன் 8.0 உள்ளிட்ட இயங்குதள மொபைல் சாதனங்களில் சேவை நிறுத்தப்பட உள்ளது. இதனால் பிளாக்பெரி மற்றும் வின்டோஸ் இயங்குதள மொபைல் போன் பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களில் 2018 ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் பயன்படுத்த இயலாது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், மேற்கண்ட மொபைல் மாடல்களில் கடந்த 2016 டிசம்பர் 31 முதல் வாட்ஸ்அப் செயல்படாது என முதலில் அறிவித்தது. ஆனால் இது 2017டிசம்பர் வரையிலும் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இனிமேல் மேற்கண்ட மென்பொருள் கொண்ட மொபைல் போன்களில் இனியும் தங்களால் தொடர்ந்து சேவையை வழங்க முடியாது என கூறியுள்ளது. இதே போல 2020 பிப்ரவரி 1ம் தேதிக்கு பின் ஆன்ட்ராய்ட் 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய மாடல்களிலும் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here