பல் விழற மாதிரி கனவுல வந்தா என்ன அர்த்தம் தெரியுமா? கனவுகளின் அர்த்தங்கள்!!

0
95

கனவுக்கும் நிஜத்திற்கும் நிறைய சம்பந்தம் இருக்கு. சிலருக்கு கனவு பலிக்கும். கனவுகள் நடக்கப்போவதை முன்கூட்டியே சொன்னதாக நிறைய பேர் சொல்லக் கேட்டதுண்டு. ஏன் உங்களுக்கும் அது போன்ற நிறைய அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் உளவியல் ரீதியாக கனவுகளுக்கும் உங்கள் ஆழ்மனதிற்கும் நிறைய தொடர்புகள் உண்டு. அதனால்தான் ஒரே மாதிரியான கனவுகளை நிறைய பேர் காண்கிறோம்.

உங்கள் ஆழ்மனதில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் கனவுகளாக வெளிப்படுகின்றன. அவ்வாறு உங்கள் கனவுக்கும், நீங்கள் சந்திக்கும் பிரச்சனை அல்லது நிகழ்வுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அவற்றை என்னவென்று காண்போம். இது போன்ற கனவுகளை ஏறக்குறைய அனைத்தையும் நீங்கள் கண்டிருக்கலாம். இவை சரிதானா என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

 

கீழே விழுவது போல் :

தூங்கிக் கொண்டிருந்த நீங்கள் திடீரென கீழே விழுவது போல் உணர்ந்தால் மனதளவில் நீங்கள் பலவீனப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உறவில், வேலையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் இப்படி கனவும் வரும்.

பற்கள் விழுவது போல் :

இப்படி நிறைய பேருக்கு கனவு வந்திருக்கும். பற்கள் விழுவது போல் கனவு வந்தால், நீங்கள் யாரிடமோ ஏமாந்திருக்கிறீர்கள் அல்லது தன்னம்பிக்கை இழந்திருக்கிறீர்கள் என அர்த்தமாகும். உங்க உற்வில் ஏதாவது விரிசல் உண்டானாலும் இப்படி பல் விழுவது போல் கனவு உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here