நினைத்தது நிறைவேறனுமா? உள்ளங்கையில் இப்படி கல் உப்பை எடுத்துக்கோங்க!!

0
155

இப்பவும் கிராமங்களிலும் சாஸ்திரம் தெரிந்தவர்களும் நம்பும் ஒரு விஷயம் உப்பை
கையால் தரக் கூடாது என்பதுதான்.
காரணம் உப்பு நெகடிவ் எனர்ஜியையை வெளியேற்றக் கூடியது. அதனால் வெறும்
கைகளில் கல் உப்பை தரும்போது அவர்களின் நெகடிவ் எனர்ஜி வாங்குபவர்களுக்கு
சென்றுவிடும்.

அதுமட்டுமல்லாமல் கல் உப்பைக் கொண்டு திருஷ்டி சுற்றுவார்கள். இதற்கும் தேவையற்ற எதிர்மறை செயல்கள் மற்றும் திருஷ்டி வெளியேற்றிவிடும் என்பதால்தான்.

நமக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கும். சரியாக ப்ரோமோஷன் இல்லாமல், வெளி நாட்டு வாய்ப்பு, வேலை கிடைக்காமல், நோய்கள் என பலவித பிரச்சனைகள் இருக்கும். உங்களுடைய தீராத பிரச்சனைகளை உங்களூடைய பாஸிடிவ் எண்ண்ங்களால் சரி செய்ய முடியும்.

 

விவேகானந்தர் கூறியிருப்பார். ” நீ எதை நினைக்கிறாயோ அதாகவே ஆகிறாய்” என்று.
ஆழ்மனதை நன்றாக படித்து அதனை ஆய்வு செய்தவர்கள் கூறும் வாசகம் இது.

அப்படி நீங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்ற கல் உப்பு உதவி செய்யும் எப்படி
தெரியுமா?

 

நினைத்தது நிறைவேற :

தினமும் அதிகாலையில் எழுந்ததும் இரு உள்ளங்கையில் கல் உப்பை வைத்துக்
கொண்டு கிழக்குப் பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள்.பின்னர் உங்களுடைய பிரச்சனை சரியாக வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், ப்ரோமோஷன் கிடைக்க வேண்டும் என எது நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை ஐந்து நிமிடங்கள் மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்ல வேண்டும்.

ஓடும் நீரில் :

பின்னர் அந்த உப்பை ஒரு வெள்ளைத் தாளில் சிந்தாமல் போட்டு ஓடும் நீரில்
போட்டுவிடுங்கள்.

இப்படி தினமும் செய்தால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் என்பது  அனுபவப் பூர்வமான உண்மை.

கல் உப்பு :

ஏன் கல் உப்பிற்கு இவ்வளவு சக்தி தெரியுமா? கடலிலிருந்து வரும் இந்த வெண்துகள்கள் மிக அதிக நேர்மறை குணங்களை பெற்றவை. அவை நம்மிடமிருக்கும் நெகடிவை வெளியேற்றி பாஸிடிவ் எனர்ஜியை நமக்கு அளிக்கும் தன்மையுடையவை. உப்பு நிறைந்த கடல் பூஜை புண்ணிய காரியங்களுக்கு பயன்படுத்துகிறோம். கடலை கடவுளாக வழிபடுகிறார்கள்.

நன்மை :

வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் வரும். செல்வம் சேரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here