பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது! அதன் அர்த்தம் என்ன?

0
4501

நம்ம ஊரில் சொலவடை ஒன்று. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று. அதற்கு உண்மையான அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக மற்ற கிரகணங்கள் போல் புதன் கிரகத்தை பார்க்க முடியாது. சூரிய கிரகணத்தின் போது மட்டும்தன புதன் கிரகத்தை பார்க்க முடியும். சூரிய கிரகணம் அன்று சூரியனின் மேற்புறத்தில் மஞ்சள் நிறத்தில் பந்து போல் ஒன்று தெரியும். அதுதன புதன் கிரகம். அதனால்தான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள்.

இது அறிவியல் காரணம். அது போல சோதிடத்திலும் இதற்கான காரணம் இருக்கிறது வாங்க பார்க்கலாம்.

புதனுடைய ஆதிக்கத்தில்தான், நமது அணுக்கள் செயல்பட்டு எண்ணங்களாக விரிவடைகின்றன. வாழ்வில் வெற்றி பெற மிக முக்கியமான தேவையான புத்திக்கு அதிபதி புதன் கிரகம் ஒருவனின் ஜாதகத்தில் வலுப் பெற்று இருந்தால் அவன் தேர்ந்த கல்வியாலனகாவும், புத்திசாலியாகவும் இருப்பான்.சிந்தனையில் சிறந்து விளக்குவான். அதுவே புதன் வலுவிழக்கும் போது அவனுக்கு மந்த புத்தி ஏற்படுகிறது.

ஒருவருக்கு திறமை இருந்தாலும் அவரால் முன்னுக்கு வராததற்கு புதன் கிரகத்தின் சுப பலன்கள் கிடைக்காமல் போவதே காரணம்.

ஒருவனின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் துர் குணங்கள் வலு இழந்து நல்ல குணங்களான, அறிவு, அன்பு, பண்பு, தன்மை, சகிப்புத் தன்மை போன்றவை உண்டாகும். அதே சமயம் புதன் சேரும் இடத்தை பொறுத்தது. சில கட்டங்களில் தனித் தன்மை இழந்து எதிர்மறை விளைவுகளையும் தருவான்.

அதாவது புதன் அறிவுக் கிரகணம் அல்லது சுப கிரஹணம். அது பாவ கிரகணத்துடன் சேரும் போது பாவியாக புதன் மாறுவான் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. நமது உடல் மற்றும் மனதின் கழிவுகளை அகற்ற புதன் கிழமை நல்லது. குறிப்பாக முடி மற்றும் நகங்கள் வெட்டுவதற்கு புதன் கிழமைகளை தேர்ந்தெடுக்கலாம் என ஜோதிடம் கூறுகின்றது.

அதனால்தான் அந்த காலத்தில் புதன் கிழமை சவரம் மற்றும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள்.

இயற்கையாய் விளைந்த பொருட்களை புதனுக்கு வைத்து பூஜிப்பதால் புதன் கிரகம் நன்மைகள் தரும், காரியங்கள் தடங்கலின்றி நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here