சிவனின் இந்த உருவத்திற்கான உண்மையான காரணம் என்ன?

0
217

சிவன் என்றால் உங்களுக்கு என்ன தோன்றும்? நெற்றியில் மூன்றாவது கண், தலையில் வழியும் கங்கை, க்ரீடம் போல் பிறை, கைகளிலிருக்கும் உடுக்கை, திரிசூலம், ருத்ரட்சை, அமர்ந்திருக்கும் புலித் தோல் என்று இந்து கடவுள்களிலேயே சற்று வித்தியாசமாக தோற்றம் கொண்டிருப்பார்.

மிகப் பழமையான இந்து மதத்தில் அதர்மத்தை அழிக்கும் கடவுளாகவும், சைவ சமயத்தின் மிக முக்கிய கடவுளாகவும் சிவன் வணங்கப்படுகிறார்.

அவரின் தோற்றத்திற்கு என்ன காரணம் என்று அறிவியல் ரீதியாகவும், ஆன்மீகத்தில்
விளக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காண்போம்.

கழுத்தை சுற்றியிருக்கும் பாம்பு :

சிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு , நஞ்சு உடலுக்குள் சென்று விடாமல் தான்
பெற்றுவிடுவதற்காக கழுத்தைச் சுற்றி இருக்கிறது. அதாவது ஒரு வடிகட்டி போல்
உள்ளது. அப்படித்தன நமது உடலிலும் ஒரு வடிகட்டி இருக்கின்றது.

நமது உடலில் மொத்தம் 114 சக்கரங்கள் உண்டு. அதில் குறிப்பாக 7 சக்கரங்கள் மிக
அடிப்படை மற்றும் முக்கியமான சக்கரங்கள். அதில் ஒன்றுதான் உங்கள் கழுத்தில்
உள்ளது. அது உங்கள் நன்மை, தீமை, தேவையற்ற விஷயங்கள், உங்கள் ஆன்மாவை
பாதிக்கும் விஷயங்கள் போன்றவற்றை உங்கள் உடலுக்குள் சென்று உங்கள் குணத்தை
மாற்றாமால் கழுத்திலேயே தடுக்க இருக்கின்றது.

பிறை :

பிறை அமைதியை தருவதற்காக. எத்தனை இடறுகள் இருந்தாலும் உண்மையான
யோகியின் மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். அப்படித்தான் நஞ்சுக்கள் (துன்பங்கள்) உங்களை தாக்கும்போது, உங்கள் மனம் அமைதியாவும், சாந்தமாகவும் இருக்க வேண்டுமென்பதை குறிக்கின்றது.

திரிசூலம் :

திரிசூலத்தில் இருக்கும் மூன்று சூலங்கள் உங்கள் வாழ்வை பிரதிபலிக்கின்றன. அதில்
இரண்டு சூலங்கள் ஆண், பெண் எனவும் நடுவில் நேராக இருப்பது நடு நிலை எனவும்
அறியப்பட்டுகிறது. ஆண் , பெண் என்பதை நீங்கள் பாலினமாக நினைக்கக் கூடாது. பிறப்பு இறப்பு, இதற்கிடையில் நீங்கள் எப்படி வாழ்க்கையை சம நிலையில் எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள் என்று அர்த்தம்.

உடுக்கை :

உடுக்கையிலிருந்து வரும் அதிர்வுகள் உங்கள் இதயத்துடிப்பை சொல்கிறது. சிவனின்
உடுக்கை சப்தத்தில் புது சக்தி பிறப்பது போல், உங்கள் இதயத் துடிப்பிலிருந்தே உங்கள்
சக்தி நீங்கள் பெறுகிறீர்கள் என்பதாகும்.

நெற்றிக் கண் :

சிவனின் இடது கண் முதற் கண்ணாகவும், வலது கண் இரண்டாவது கண்ணாகவும், புருவ மத்தியில் சூட்சுமமாக உள்ள நெற்றிக் கண் மூன்றாவது கண்ணாகவும் கருதப்படுகிறது.

மேல் நோக்கி நீண்டிருக்கும் மூன்றாவது கண், மற்ற இரு விழிகளின் கூட்டு சக்தியை
பிரதிபலிக்கிறது. தெய்வீக சக்தியின் இருப்பிடமாக திகழ்கிறது. அப்படிமனிதனுக்கும் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் சக்கரம் ஆன்மாவின் சக்தியின் அடையாளம்.மிகவும் ஆற்றலுடையது.

ருத்ராட்சம் :

ருத்ராக்ஷத்தால் தேவதைகளின் ஒளி அலைகளை மனித உடம்பின் ஒலி அலைகளாக
மாற்றவும், அதே போல் ஒலி அலைகளை ஒளி அலைகளாக மாற்றவும் முடியும்.
அதனால், மனிதனால் தெய்வீக அதிர்வுகளை உணர்ந்து, மனித சிந்தனையை தேவ
பாக்ஷையாக மாற்றவும் முடிகிறது.

கங்கை :

சுற்றுப்புற சூழல் பாதிப்பு இருந்தும் கூட, கங்கை புனிதமாகக் கருதப்படுகிறது.
இவ்வுலகில் உள்ள எல்லா நீர் நிலைகளைக் காட்டிலும், கங்கை தூய்மையானதாக
கருதப்படுகிறது.சூட்சும உலகை உணர்ந்தவர்கள் மட்டுமின்றி விஞ்ஞானிகளாலும் கூட
ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை இது.

நம் உடம்பிற்கும் ஆத்மா மூலாதாரமாக விளங்குகிறது. அதே போல் ஒவ்வொரு
பொருளின் சைதன்யம் மற்றும் பவித்ரத்தின் (சூட்சும சைதன்ய துகள்கள்) நடு மையமாக
‘கங்’ விளங்குகிறது. ‘கங்’கின் உற்பத்தி ஸ்தானம் கங்கா. அதனால்தன சிவன் அதனை
அவரது தலையில் வைத்திருக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here