சென்னையில் மழையால் மக்களுக்கு எச்சரிக்கை!

0
718

சென்னையில் கனமழை பெய்து வருதால் பல இடங்களில் மழை நீர் தேங்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல வீடுகள் தண்ணீர் சூழ்ந்துள்ளது.  கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு தொடர்ந்து  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பெற்றோருக்கும் வார விடுமுறை என்பதால் மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம் என திட்டமிட்டிருப்பார்கள். சென்னையின் தாழ்வான பகுதிகளிலும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலை முதல் மழையும் ஓய்ந்துள்ள நிலையில் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் பெற்றோரே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மழை நீரை வேடிக்கை பார்க்கச் செல்லும் இடத்தில் விபரீதங்களுக்கு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. ஏரிகளின் கரைகள் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. இதே போன்று மேம்பாலங்களின் தடுப்புச் சுவர்களின் உறுதித் தன்மையும் சற்று யோசிக்க வைக்கும். மற்றொரு புறம் மழை நீரில் மின்சார வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு இருக்கிறது.ஒரு வேளை சாலையில் பள்ளங்கள் இருந்தால் அந்த இடத்தில் அபாயத்தை குறிக்கும் ஏதேனும் ஒரு அறிகுறிகளை செய்துவிட்டு செல்லலாம். இதே போன்று உற்சாகம் அல்லது பயத்தின் மிகுதியால் செல்போனில் பலர் செல்பி மற்றும் வீடியோ எடுக்க நினைப்பர். அப்படி செய்யும் போது நம்முடன் வந்தவர்களின் பாதுகாப்பும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.மழை நீரால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் ஒரு புறம் என்றால் தானாக விபரீதத்தை தேடிக் கொள்பவர்கள் முன்எச்சரிக்கையோடு அவற்றை தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here