தொட்டதெல்லாம் நஷ்டமா? தோஷம் நீங்கி வாழ்வில் முன்னேற நீங்க செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா?

0
83

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கும். திடீரென சுழற்றிப் போட்டது போல் பிரச்சனை மேல் பிரச்சனையா?

வீட்டில் திடீரன யாருக்காவது மன நிலை பிறழ்வு, வியாபாரத்தில் நஷ்டம், கடனுக்கு மேல் கடன், புத்திர பாக்கியமின்மை என தொட்டதெற்கெல்லாம் நஷ்டம் முடக்கம் என வரும்போது என்ன செய்வதென குழம்பும் நிலை சிலருக்கு இருக்கும்.

அப்படியான முக்கிய பிரச்சனைகள் உங்கள் வீட்டில் தலைவிரித்தாடியதென்றால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாயிருக்கிறது என்று பொருள்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அப்படி இந்த பிரச்சனைகளெல்லாம் இருந்தால் நீங்கள் சென்று வணங்கி, தோஷம் கழிக்க வேண்டிய இடம் எது தெரியுமா? திருவிடைமருதூர்.

திருவிடை மருதூர் சிவனுக்கெல்லாம் சிவன் அமைந்த இடம் என்று சொல்கிறார்கள்.இங்கு ஒருமுறை சென்றால் உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் ஏற்பட்டுள்ள பிரம்மஹத்தி தோஷம் விலகிவிடும். அது எங்கு இருக்கிறது? எப்படி போக
வேண்டுமென பார்க்கலாம்.

மகாலிங்கம் கோவில் :

மகாலிங்கம் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடை மருதூரில் உள்ளது. லிங்கத்திற்கெல்லாம் மூலஸ்தனமாக இந்த கோவில் இருப்பதால்தான் மகாலிங்கம் என்று பெயர் பெற்றுள்ளது. இத்திருத்தலத்தில் ஈசனே எழுந்தருளியிருந்து பூஜை செய்ய வேண்டிய பூஜாவிதிகளை ஏற்படுத்தியதாகத் தல புராணம் கூறுகிறது.

மன நோயை குணமாக்கும் கோவில் :

மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மகாலிங்க கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கிருக்கும் காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் குளிக்க வைத்து காலை,மாலை என இரு வேளைகளிலும் சிவனை வழிப்படச் செய்கிறார்கள்.

அந்த சமயத்தில் தோஷப் பரிகாரம் செய்யப்படுவதால் அவர்களின் மன நிலை சீராகிறது. இது பலரின் அனுபவங்களாக அங்கு வரும் பக்தர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

 

திருமணத் தடை :

திருமணத்தடை, முன்னோர் தோஷங்கள் இருப்பவர்கள் அங்கே சென்று பரிகாரம் செய்தாலே போதும். முன்ஜென்ம பாவங்கள், முன்னோர் செய்த தீவினைகள் எல்லாம் நிவர்த்தியகைவிடும்.

புத்திர பாக்கியம் :

மகாலிங்க கோவிலில் தரிசனத்திற்கு செல்லும் வழி வேறு. வெளி வரும் வழி வேறு. பெரு நலமாமுலையம்மை மற்றும் அம்பாள்
மூகாம்பிகையையும் வழிபட்டு அதன் அருகிலிருக்கும் வாசல் வழியாகத்தான் வெளிசெல்ல வேண்டுமாம். இந்த கோவிலில் இருக்கும்
மூகாம்பியை வணங்குவதால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் சொல்கிறார்கள்.

நேர்த்திக் கடன் :

வேண்டுதல் பலித்ததும் மூலசுவாமி மற்றும் மூகாம்பிகைக்கு ஆடையலங்காரம் செய்வித்து, நெய்வேத்தியங்களை படைக்கிறார்கள்.

நடை திறக்கப்படும் நேரம் :

காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு செல்வது முக்கியம்.

எப்படி செல்லலாம் ?

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தாலும் கும்பகோணத்திலிருந்து திருபுவனம் வழியாக வெறும் 8 கிலோ மீட்டர் தொலைவில் திருவிடைமருதூரை அடையலாம். தஞ்சாவூரிலிருந்து 51.கி.மி தூரத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here