சஸ்பென்ஸ் திரில்லர் ராட்சசன்.. விஷ்ணு விஷால்-க்கு அமலா பால் ஜோடி..!

0
261

முண்டாசுபட்டி படத்தை இயக்கிய ராம் குமார் அடுத்தப்படமாக ராட்சசன் என்னும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார். இப்பட்டத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ள நிலையில் சுமார் 4.2 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இப்படத்தில் முதல் முறையாக விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். கடந்த வாரம் அமலா பால்-இன் ஆடை படத்தின் போஸ்டர் தமிழ்நாட்டு மட்டும் அல்லாமல் இந்திய முழுவதும் பேசப்பட்டது.

இந்நிலையில் படத்தின் டிசர் பல இடத்தில் இமைக்கா நொடிகள் படத்தை நினைவுப்படுத்துகிறது.

மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் தொடர்ந்து ராதா ரவி, நிழல்கள் ரவி, முனிஷ்காந்த், காலி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விஷ்ணு விஷால் தற்போது 4 படங்களில் நடித்து வருகிறார், இவை சிலுக்குவார்பட்டி சிங்கம், இடம் பொருள் ஏவல், ஜகஜால கில்லாடி, ராட்சசன். இதில் இடம் பொருள் ஏவல், ராட்சசன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால், காலி வெங்கட், முனிஷ்காந்த் மற்றும் படத்தின் இயக்குனர் ராம் ஆகியோர் கூட்டணி ஏற்கனவே முன்டாசுப்பட்டி படத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில், இதே வெற்றி ராட்சசன் படத்திலும் இருக்கும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here