விஷாலுக்கு அரசியலில் செம்ம எதிர்காலம் இருக்காம்… ஜாதகம் சொல்லுது!

0
2160

நடிகர் விஷாலுக்கு அரசியலில் ஆரம்பமே சறுக்கியுள்ளது. இது குறித்து அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறதுதசாபுத்தி, சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சிகள் அவருக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

விஷாலுக்கு அரசியலில் செம்ம எதிர்காலம் இருக்காம்... ஜாதகம் சொல்லுது!

என்ன திசை?

ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி 1977ஆம் ஆண்டு சென்னையில் பிறந்துள்ளார். அவர்  சதயம் நட்சத்திரம் கும்பராசி துலாம்லக்னத்தில் பிறந்துள்ளார் விஷால். சதய நட்சத்திரம் ராகு திசை 1980 வரை நடைபெற்றது. குரு திசை 1996 ஆம் ஆண்டு  வரை குரு திசை நிலவியது. சனி திசையானது 1996 முதல் 2015 வரை சனி திசை நடைபெற்றது. புதன் திசை 2015 முதல் 2032 வாரை நடைபெறும்.

புதன்திசை தொடங்கிய உடன் தலைமை பதவிகள் தேடி வந்துள்ளன.11ஆம் இடத்தில் சிம்மத்தில் சூரியனுடன் புதன் புதஆதிபத்திய யோகம். அரசியலில் நல்ல நிலை தரும் நிலையாகும். மகம் நட்சத்திரத்தில் சூரியன் அமர்ந்துள்ளார்.

விஷாலுக்கு அரசியலில் செம்ம எதிர்காலம் இருக்காம்... ஜாதகம் சொல்லுது!

 

திருமண தடை:

விஷாலுக்கு ஜாதகப்படி இவருக்குக் கால சர்ப்ப தோஷம் உள்ளது. இது யோகமாக  மாறிய நிலையிலும் திருமண தடைக்குக் காரணமாக இருக்கிறது. லக்னாதிபதி சுக்கிரன் 10ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். 10 ஆம் இடமான தொழில்  ஸ்தானத்தில் சனியும் சுக்கிரனும் இணைந்துள்ளார். எனவேதான் கலைத்துறையில் வெற்றி பெற்றுள்ளார். சனி தொழில் ஸ்தானத்தில் இருப்பதால், இது இவருக்குப்  பதவியை பெற்றுக்கொடுத்துள்ளது.

விஷாலுக்கு அரசியலில் செம்ம எதிர்காலம் இருக்காம்... ஜாதகம் சொல்லுது!

வெற்றி நிச்சயம்:

ராசிக்கு 9வது இடத்தில் உள்ள குரு 5ஆம் பார்வையாக ராசியைப் பார்க்கிறார். 11வது இடத்தில் உள்ள சனி தனது 3வதுபார்வையாக ராசியைப் பார்க்கிறார். இந்தக்  குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களையே கொடுக்கும். இத்தனை நல்ல  அம்சங்கள் இருப்பதால் ஆரம்ப சறுக்கல் ஏற்பட்டு அடுத்து வெற்றிக்கு வழிவகுக்கும்  என்கிறார்கள் ஆரூடர்கள்.

விஷாலுக்கு அரசியலில் செம்ம எதிர்காலம் இருக்காம்... ஜாதகம் சொல்லுது!

எப்போது வெற்றி?

சிம்மத்தில் சூரியன் அமர்ந்ததால் அரசனைப்போல் வாழ்வான். ஆளுமை திறன்மிக்கவரஅரசியலில் ஈடுபாடு அதிகம் இருக்கும். தலைமை பதவிகள் தானாகத் தேடி வரும்.  மகம் நட்சத்திரத்தில் சூரியன் அமர்வது மிகச் சிறப்பானது. விஷாலுக்கு சூரியன் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் புதனுடன் இணைந்து அமர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here