ராகுல் டிராவிட் சாதனையை முறியடிக்கத் துடிக்கும் கோலி..!

0
1058

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் இந்தியா பின்தங்கி இருந்தாலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக விராத் கோலி, அஸ்வின், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சும்மா தாறுமாறு.

இந்நிஸையில் இந்திய அணியில் கேப்டன் விராத் கோலி முதல் 3 டெஸ்ட் போட்டியில் மட்டும் 440 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். இதுவரை எந்த ஒரு இந்திய அணியின் கேப்டனும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இவ்வளவு அதிகமான ரன்களைக் குவித்தது இல்லை.

virat kohli targeting Rahul Dravid's 602 ராகுல் டிராவிட் சாதனையை முறியடிக்க துடிக்கும் கோலி..!

1990 சிரியஸில் முகமது அசாருதின் 426 ரன்களை எடுத்திருந்த நிலையில் கோலி 3 போட்டிகளிலேயே 440 ரன்களை எடுத்துள்ளார்.

இன்னும் 2 போட்டிகள் நடக்க உள்ள நிலையில், கோலி ராகுல் டிராவிட்-இன் 602 ரன் சாதனையை முறியடிக்க இலக்கு வைத்திருப்பதாகத் தெரிகிறது. 2002ஆம் ஆண்டு இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் 602 ரன்களை எடுத்திருந்தார். இதனை இலக்காக வைத்த தற்போது விராத் கோலி விளையாடத் துவங்கியுள்ளார்.

virat kohli targeting Rahul Dravid's 602 ராகுல் டிராவிட் சாதனையை முறியடிக்க துடிக்கும் கோலி..!

ஏற்கனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாட்டில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைந்த நிலையில், தற்போது இங்கிலாந்திலும் சாதனை படைக்கத் துடிக்கிறார் கோலி.

virat kohli targeting Rahul Dravid's 602 ராகுல் டிராவிட் சாதனையை முறியடிக்க துடிக்கும் கோலி..!

மேலும் 118 டெஸ்ட் போட்டியில் கோலி 23 சதத்தை அடித்துள்ளார். இவ்வளவு குறைந்த போட்டியில் இவ்வளவு சென்சூரிகளை அடித்த வீரர்கள் மிகவும் குறைவு. டானி பிராட்மேன் 59 போட்டிகளிலும், சுனில் கவாஸ்கர் 109 போட்டியிலும், ஸ்டீவன் ஸ்மித் 110 போட்டியிலும் 23 சதத்தை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டெஸ்ட் போட்டியில் அதிகச் சென்சூரிகளை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கோலி சேவாக்-இன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here