மகா. விவசாயிகளை ஒருங்கிணைத்த விஜூ கிருஷ்ணன் யார்?

0
222

மஹாராஸ்டிரா மாநிலத்தை மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்த விவசாயிகள் பேரணி நடைப்பெற்று அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். நாசிக்கிலிருந்து மும்பை சட்ட மன்றத்தை முற்றுகையிட்டு வெற்றிப் பெற்றுள்ளனர். 180 கிலோ மீட்டர் நடைபயணமாக 6 நாட்கள் நடந்து வந்து மாபெரும் பேரணியை நடத்தியுள்ளனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் விஜூ கிருஷ்ணன்.

யார் இந்த விஜூ கிருஷ்ணன்:

யார் இந்த விஜூ கிருஷ்ணன்:
கேரளாவில் கரிவெல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் விஜூ கிருஷ்ணன். பள்ளி படிப்பை கேரளாவில் முடித்து. டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைகழகத்தில் படித்துள்ளார். அரசியலில் ஆர்வம் இருந்ததால் பல்கலைகழக தேர்தலில் நின்று மாணவர் சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தேடுக்கப்பட்டார். பெங்களூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் அரசியல் பாடத்ததின் ஆசிரியராக இரண்டாடுகள் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு தனது வேலை விட்டு விட்டு முழுநேர கட்சி பணியினை செய்து வருகிறார்.

யார் இந்த விஜூ கிருஷ்ணன்:

போராட்டங்கள்:
டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைகழகத்தில் கல்லூரியில் படிக்கும் போதே மாவணர்களுக்கான பல போராட்டங்கள் நடத்தியுள்ளார். கல்லூரி கட்டணத்திற்கு எதிராக போராடி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதேபோல் பெண்களுக்கு எதிராக கல்லூரியில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக இயக்கத்தை கல்லூரியிலேயே உருவாக்கினார். மாக்ஸிட் கட்சியில் தன்னை முழுயைாக ஈடுப்படுத்திக் கொண்ட விஜூ கிருஷ்ணன் விவாசாய பிரச்சனைகளுக்கு எதிராகவும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் போரட்டங்களுக்கு முழுமையா அர்பணித்துக் கொண்டார்.

யார் இந்த விஜூ கிருஷ்ணன்:

விவசாய பேரணி:
அகில இந்திய கிசான் சபாவில் துணை செயலாளராக இருக்கும் விஜூ கிருஷ்ணன் நாடு முழுவதும் இந்த போராட்டத்தை திரும்பி பார்க்க வைத்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. நேர்மையான எந்த வித ஆர்ப்பாடமும் இன்றி நடைப்பெற்ற இந்த பேரணி ஒட்டு மொத்த இந்தியாவின் தலைப்பு செய்தியாகியுள்ளது. பேரணிக்கு முன்பே நம் எப்படி நடத்த போகிறோம் அமைதியை கடையை படைப்பிடித்து வெற்றியை அடைய வேண்டும் என்பது குறித்து தீவரமாக விவசாய மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

180 கி.மீ நடைபயணம்:
நாசிக்கிலிருந்து மும்பை சட்ட மன்றம் வரை 180கி.மீ 6 நாட்கள் நடைப் பயணமாக பேரணியை நடத்திய விவசாயிகள் இந்த போராட்டம் மும்பை நகரத்தையே புரட்டிப்போட்டுள்ளது. விஜூ கிருஷ்ணனின் இந்த முயற்சி இந்தியாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

தமிழிசைக்கே அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் அனுப்பிய ‘ஆண்டவர்’…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here