விஜய் மல்லையாவுக்குப் பதிலடி கொடுத்த அருண் ஜேட்லி..!

0
3328

இந்திய வங்கியில் கடன் பெற்று 9,000 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா, இன்று லண்டன் நீதிமன்றத்தில் அவரை இந்தியாவிற்கு அழைத்து வர சிபிஐ அமைப்பு தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின் போது விஜய் மல்லையா நான் நாட்டை விட்டு வெளியேறும் முன்பு நிதியமைச்சரைச் சந்தித்துக் கடன் திருப்பிச் செலுத்துவதாகத் தெரிவித்த பின்பு தான் வெளியேறினேன் என விசாரணை முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் கூறினார்.

இப்போது நிதியமைச்சராக இருந்தது அருண் ஜேட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நான் கடனை திருப்பிச் செலுத்த சில விதிமுறைகளையும் கோரிக்கைகளையும் வைத்தேன் அதை வங்கி தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் விஜய் மல்லையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விஜய் மல்லையா கூறிய வார்த்தைகள் மத்திய அரசை அதிரவைத்துள்ளது. இதன் எதிரொலியாக மல்லையா கூறிய வார்த்தைகள் பரவத் துவங்கிய சில மணிநேரங்களில் அருண் ஜேட்லி பதில் அளித்துள்ளார்.

மல்லையாவின் கூறியதற்குப் பதில் அளித்த அருண் ஜேட்லி, மல்லையா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மல்லையா என்னை நாடாளுமன்ற வளாகத்தில் தான் கடனை திருப்பிச் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால் அதற்குப் பின் எவ்விதமான சந்திப்பு நடக்கவில்லை, 2014ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக விஜய் மல்லையாவை ஒருபோதும் சந்தித்தில்லை என்று அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here