விஜய் ஆண்டனி திமிரு புடிச்சவனாம்.. யூடியூப்-இல் படம் போட்டு காட்டுகிறார்கள்..!

0
3100

தமிழ் சினிமாவில் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு நடிப்பு, தயாரிப்பு என இரண்டிலும் தொடர் வெற்றியைக் கண்டு வந்த விஜய் ஆண்டனி கடந்த சில படங்கள் சரியாக அமையவில்லை என்பது ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் டிஆர்-க்கு அடுத்தபடியாக நடிப்பு, இசை, தயாரிப்பு எனப் பல பரிமாணங்களில் களமிறங்கி திமிரு புடிச்சவன் என்ற பெயரில் படத்தைத் தயாரித்து நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இப்படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைக் கணேசா என்பவர் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்ராஜ் நடித்துள்ளார். டிக்டிக்டிக் படத்தில் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த நிவேதா இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமிரு புடிச்சவன் படத்தின் டீசர் நேற்று யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இன்று டிரென்டிங் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இதுவரை இப்படத்தின் டீஸரை சுமார் 7.8 லட்சம் பேர் பார்த்துள்ளது மட்டும் அள்ளாமல் 45,000 பேர் லைக் செய்துள்ளனர். டீஸர் எப்படி உள்ளது என மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here