எந்த இடத்தில் இருந்து பார்த்தால் சேலத்தை இப்படி பார்க்கலாம்?

0
2109

சேலத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஏற்காடு மலையில் இருந்து இரவு 7 மணிக்கு மேல் கீழே பார்த்தால் தங்கத்தை குவித்து வைத்தது போல ஜொலி ஜொலித்துக் கொண்டிருக்கும் சேலம் மாநகரம்.

மேலதிக தகவல்கள்: “சேலத்தை சுற்றி அமைந்துள்ள சுற்றுலா தளங்கள்”

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மலை பகுதி சுற்றுலா தலங்கள் கோடைக்கு இதமளிக்கின்றன. உயர்ந்த சிகரங்களை கொண்ட மலைகள், தலையை தொட்டுச் செல்லும் மேக கூட்டம், காட்டுப்பூக்கள் கூட்டம், கோயில்கள், கோட்டைகள், அருவிகள் என ரசிக்க ஏராளமான அம்சங்கள் உள்ளன. அவற்றில் 6 சுவாரசியமான சுற்றுலா தளங்களை அடுத்தடுத்த ஸ்லைட்களில் பார்க்கலாம்.

சேலத்தில் இருந்து அருகில் அமைந்துள்ள 6 வீக்-என்ட் சுற்றுலா தளங்கள்!

1. கிள்ளியூர் ஏரி:
ஏற்காடு ஏரியில் இருந்து 2.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பருவமழை காலம் முடிந்த பின்பு அருவியின் காட்சி சிறப்பனதாக இருக்கும். ஏற்காடு ஏரி நிரம்பி வழியும்போது 3௦௦ அடி உயரத்தில் இருந்து கிள்ளியூர் பள்ளத்தாக்கில் அருவியாக விழுகிறது.
உகந்த நேரம்: அக்டோபர் – டிசம்பர்
வசதிகள்: உணவகங்கள், கழிவறை, லாக்கர்ஸ்

 

சேலத்தில் இருந்து அருகில் அமைந்துள்ள 6 வீக்-என்ட் சுற்றுலா தளங்கள்!

2. சங்ககிரி கோட்டை:
சேலம் மாவட்டத்தின், சங்ககிரி வட்டத்தில் ‘சங்ககிரி துர்க்கம்’ என்ற மலையின் மீது அமைந்துள்ள அழகிய கோட்டை இது. சேலத்தில் இருந்து 35 கிமீ தொலைவு. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டை விஜயநகர அரசர்களால் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 17ம் நூற்றாண்டில் திப்பு சுல்தானால் இக்கோட்டை பலப்படுத்தப்பட்டது. தீரன் சின்னமலையை இக்கோட்டையில்தான் வெள்ளையர்கள் தூக்கில் இட்டார்கள்.
உகந்த நேரம்: எப்போதும்
வசதிகள்: உணவகங்கள், கழிவறை, லாக்கர்ஸ்

 

சேலத்தில் இருந்து அருகில் அமைந்துள்ள 6 வீக்-என்ட் சுற்றுலா தளங்கள்!

3. கொல்லி மலை:
சேலத்தில் இருந்து 2 மணி நேர மலைப் பயணத்திற்கு பின் கொல்லிமலையை அடையலாம். சேலத்தில் இருத்தும் அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வல்வில் ஓரியின் சிலை, தாவரவியல் பூங்கா, அரப்பளீஸ்வரர் கோயில், ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி, வாசலூர்பட்டியில் படகு சவாரி போன்றவை இங்கே சிறப்பு.

உகந்த நேரம்: மழைக்காலத்திற்குப் பின்
வசதிகள்: உணவகங்கள், வாகனங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here