உங்கள் காதல் உடனடியாக நிறைவேற வேண்டுமா?…. பௌர்ணமி ரூல்ஸை ஃபாளோ பண்ணுங்க!

0
538

இந்த பூமியானது தன்னுடைய ஈர்ப்பை மட்டுமே கொண்டிருக்கவில்லை. அண்டவெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் மற்ற கிரகங்களின் ஈர்ப்புத் தன்மையையும் தனக்குள் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் பூமியை மிக நெருங்கி வருகின்ற அல்லது பூமிக்கு நேராக வருகின்ற கிரகங்களின் ஈர்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். பௌர்ணமி, அமாவாசை நாட்களில் சந்திரனுடைய ஈர்ப்பு மிக அதிகமாக பூமியின் மீது பாயும்.

பௌர்ணமி மகிமை:
சோதிட விதிகளின் படி, சந்திரன் என்பவன் மனோகாரகன். அதாவது மனிதர்களின் எண்ணங்களை உருவாக்குபவன். இருக்கும். பௌர்ணமி, அமாவாசை நாட்களில் கடல் எப்படி கொந்தளிப்புடன் காணப்படுகிறதோ, மனிதனின் மனமும் கொந்தளிப்புடன், ஆக்ரோஷத்துடன் இருக்கும் என்பதை மிக நுணுக்காமாக ஆராய்ந்தால் உங்களுக்கே புரியும். இது சந்திரனின் தாக்கம் அல்ல. நமது எண்ண அலைகளை நீண்ட தூரம் கடத்திச் செல்லக்கூடிய சக்தியே இது.

முன்னோர்களின் நினைவலைகள்:
இதனால்தான் மற்ற நாட்கள் செய்யும் பூஜை புனஸ்காரங்களை விட இருக்கும். பௌர்ணமி, அமாவாசை நாட்களில் செய்யும் பூஜைகளுக்கு அதீத சக்தி உண்டு. இந்த பூஜைகளில் நாம் வேண்டிக்கொள்ளும் எந்த வேண்டுதலும் கூடிய விரைவில் நடக்கும். அமாவாசை நாளில் நமது முன்னோர்களின் நினைவலைகளுக்கும் அதீத சக்தி கிடைத்திருக்கும் என்பதால்தான் அன்று, இறந்தவர்களுக்கு விரதம் இருந்து சாமி கும்பிடும் முறையும் கடைபிடிக்கப்படுகிறது.

ஆனி பௌர்ணமி:
குறிப்பாக ஆனி பௌர்ணமி நாளில் நாம் வேண்டிக்கொள்ளும் எத்தகைய நல்லறங்களுக்கும் வழி பிறக்கும். ஆனி பௌர்ணமி விரதம் மேற்கொண்டால் மங்கள பாக்கியம் நீடித்து நிலைக்கும் என்றும், திருமண வரன் கைக்கூடும் என்றும் ஐதீகங்கள் கூறுகின்றன. இந்நாளில் கண்ணனை வேண்டி வழிபட்டால் காதல் உடனடியாக கைக்கூடும். காதலில் உள்ள பிரச்சினைகளும் பௌர்ணமி வழிபாட்டின் மகிமையால் தீரும் என்றும் ஐதீகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here