அடங்காத டிரம்ப் சீனா மீது மீண்டும் வரி விதிப்பு.. கதறும் அமெரிக்க மக்கள்..!

0
11602

அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் சீனாவுடன் வர்த்தகத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் மத்தியில் வர்த்தகப் போர் உருவாகியுள்ளது. இந்த வர்த்தகப் போர் அமெரிக்கா சீனா இடையில் தானே என்று நினைக்க வேண்டாம். அமெரிக்கா உடனான வர்த்தகம் செய்யும் எல்லா நாடுகளுக்கும் இதே பிரச்சனை தான்.

சொல்லப்போனால் அமெரிக்கா தற்போது விதித்துள்ள அறிவிப்புகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சீனா மட்டுமல்ல ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளும் தான்.

As US, UK Turned aganist Indians, Canada put red carpet - SparkTV Tamil கனடாவில் இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. கடுப்பாகும் டொனால்டு டிரம்ப்..! - ஸ்பார்க்டிவி தமிழ்

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அமெரிக்க அதிபர் இந்த நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் சீன பொருட்கள் மீது கூடுதலாக 200 பில்லியன் டாலர் அளவிலான வரியை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் சீனா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் சுமார் 505 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது டிரம்ப் அரசு அதிகளவிலான வரியை விதித்துள்ளது. இதனால் அமெரிக்கர்கள் இனி பெரும்பாலான பொருட்களுக்குக் கூடுதலாக 10 சதவீத வரி செலுத்த வேண்டிய மோசமான நிலை உருவாகியுள்ளது.

ஜூலை மாதத்தில் அமெரிக்கா முதற்கட்டமாக 50 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழிற்துறை பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தது. தற்போது அறிவித்துள்ள அறிவிப்புகள் மூலம் நுகர்வோர் பொருட்கள் மீதும் வரி விதிக்கப்பட உள்ளது.

வருகிற செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அமெரிக்கர்கள் சீன இறக்குமதி பொருட்களை வாங்கும் போது கூடுதலாக 10 சதவீத வரி செலுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து இந்த வரி அளவுகள் 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் 25 சதவீதம் வரையில் உயரும் நிலை உருவாகியுள்ளது என அமெரிக்க நிர்வாகத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவை எதிர்த்து சீனா அரசு அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 60 பில்லியன் டாலர் அளவிலான வரியை விதித்தது.

இதில் கோபம் அடைந்த டிரம்ப், சீனா அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதித்தால் அமெரிக்கா 267 பில்லியன் டாலர் அளவிலான பொருட்கள் மீது அதிகளவிலான வரி விதிக்கும் என அறிவித்த நிலையில் இரு நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தகப் போர் முற்றியது.

இரு நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தகப் போர் மூலம் பாதிக்கப்படுவது அந்தந்த நாட்டு மக்கள் தான். இரு நாட்டு மக்களும் அனைத்து முக்கியமான பொருட்களுக்கும் கூடுதலான வரியைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்தப் பிரச்சனையின் காரணமாகச் சர்வதேச சந்தையின் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. காரணம் சீனா உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடு, அமெரிக்கா உலகின் முக்கியமான நுகர்வோர் சந்தை. இப்படி இருக்கும் நிலையில் இருநாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாகச் சர்வதேச சந்தையின் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.

அமெரிக்கா தற்போது விதித்துள்ள வரிகள் ஐரோப்பா – அமெரிக்கா வர்த்தக்தையும் பாதித்துள்ள காரணத்தால், ஐரோப்பிய நாடும் இதை எதிர்கொள்ள அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்க ஆலோசனை செய்து உள்ளது. இது அமெரிக்காவின் அடுத்த வரி விதிப்பில் ஐரோப்பாவின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிந்துவிடும்.

 

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போரின் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி சந்தையும் பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் மிரள வைத்த பெண் கிரிமினல் கொலையாளிகள்!!

2 லட்சத்தில் பாரீன் டூர்.. ஹனிமூன்-க்கு ஏற்ற இடம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here