காதலுடன் ஓடிப்போன பெண்ணுக்கு தந்தை மற்றும் சகோதரனால் நேர்ந்த கொடூரம்!

0
238

பெண்களுக்கு பெற்றவர்களால் கூட பாதுகாப்புக்கு இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் உத்திரபிரதேசத்தில் நடந்த குரூரமான ஒரு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வளர்ந்து வரும் இந்தியாவில் பெண்ணை சமமாக மதிக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வரும் சூழலில், ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் தனதே என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தான் விரும்பிய காதலனுடன் சில மாதங்களுக்கு முன்பு சென்றுவிட்டார். அவரின் பெற்றோர்கள் அவளை தேடி சென்று கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

வீட்டுக்கு வந்த பெண்ணை அவளது தந்தை மற்றும் சகோதரர் இருவரும் சேர்ந்து  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். எப்படியோ அங்குயிருந்து தப்பித்து காவல் நிலையம் சென்று நடந்த கொடுமைகளை கூறியுள்ளார் அந்த இளம்பெண்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் அவரது தந்தை மற்றும் சகோதரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெற்ற மகளை தந்தையும் சகோதரனும் மாறி மாறி கற்பழித்த இந்த விரும்பத்தகாத சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here