பலாத்காரத்தை தடுக்க உ.பி. பெண் தயாரித்துள்ள ‘ரேப்-ப்ரூஃப்’ உள்ளாடை!

0
29390

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பல பாலியல் பலாத்காரம் போன்ற கொடுஞ்செயல்கள் நடக்கின்றன. பெண்ணை சதைப்பிண்டமாக பார்க்கும் வக்கிர புத்திக்காரர்கள் உலவும் நாடு இது. சிறு குழந்தையையும் கூட பலாத்காரம் செய்து கொலை செய்யும் மிருகங்கள் உலவும் காடு இது. பெண்களை பாதுகாக்க அரசும் நீதிமன்றங்களும் சட்டங்கள் இயற்றி வந்தாலும், வன்கொடுமைகள் குறைந்தபாடு இல்லை.

பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை தடுக்க உத்திரப்பிரதேத்தை சேர்ந்த சீனு குமாரி என்ற பெண் ஒரு பிரத்தேகமான Anti-rape உள்ளாடையை வடிமைத்துள்ளார். இந்த உள்ளாடையின் வெளிப்புறத்தில் சிறிய கேமரா மற்றும் கத்தி ஆகிய உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உறுப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வண்ணம் கச்சிதமாக இக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த வடிவமைப்பால் கூசுதலோ அல்லது அசௌகரிய குறைபாடோ ஏற்படாது.

இத்துடன் ஒரு அவசர அழைப்பு பட்டனையும் இந்த உள்ளாடையில் உள்ளது. இதை அழுத்தினால் ஜிபிஎஸ் மூலம் பெற்றோர்களுக்கும், அருகில் உள்ள காவல்துறைக்கும் உடனடியாக செய்திகள் சென்று விடும். அதோடு பலாத்காரம் செய்ய முற்படும் நபரையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவிடும்.

இதனை எல்லா நேரங்களிலும் அணிய வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் தனியாக செல்லும் போது அணிந்து கொள்ளலாம். பெண்களின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட இந்த உள்ளாடையின் செயல்பாடுகள் மேலும் எளிதாக்கிட தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சீனு குமாரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here