ஆண்களின் தீண்டல் சரியானதா?

0
367

பிறந்த குழந்தையை தாய் தொடுதல், காதலன் காதலிக்குமான தொடுதல், சண்டைக்கு பிறகு மனைவயை தொடுதல், தோழியும் தோழனும் நகைச்சுவையாக பேசும் போது  தொடுதல், என பல வகையில் தொடுதல் உள்ளது. தொடுதல் இல்லாமல் எந்த உறவுகளும் சிறப்பானதாக இருக்க முடியாது. ஆனால் தொடுதல் தீயவையாக இருக்க கூடாது. நம் சமூகத்தில் ஒரு பெண் பருவமடைந்த பிறகு தொடுதல் ஒரு தீண்டாமை உணர்வாகவே பார்க்கப்படுகிறது. அவளை கட்டிக் கொடுக்கும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிட்டு இருப்பதாக பெற்றோர்கள் சொல்ல கேட்டியிருப்போம். முத்தம் அரவணைப்பு சாமதான வார்த்தைகளை போலவே தொடுதலும் அன்பின் வெளிப்பாட தான். ஓர் ஆண்மகனின் தொடுதல் என்பது பெண்ணின் வாழ்வில் எத்தகைய பங்கு கொண்டுயிருக்கிறது?..

அழுகை

மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்பட்டு கண்ணீர் சிந்திக் கொண்டியிருக்கும் போது விழிகளில் வழியும் நீரை துடைத்து கன்னங்களை கரங்களால் தாங்கும் போது உண்டாகும் தொடுதல் கண்ணீரை மட்டுமில்லாமல் கவலை காயங்களை போக்கும் அருமருந்து. இத்தகைய தொடுதல் என்பது அன்போடு பழகும் நபர்களிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது.

பாதுகாப்பு

நட்பாக இருந்தாலும் கூட பெண்கள் தம் தோள் மீது ஆண்கள் கை வைத்து பேச  அனுமதிக்க மாட்டார்கள். இது நம் ஊர்களில் காண முடியும். ஒரு ஆணை ஒரு பெண் தீண்ட அனுமதிக்கறாள், அவனது தொடுதலை ஏற்றுக்கொள்கிறாள் என்றால் அது அவனுடன் இருப்பது  பாதுகாப்பாக உணர்கிறாள் என்பது பொருள். அது ஆண்கள் கெடுத்து விடக்கூடாது. இதை பயன்படுத்தி தவறான முறையில் அனுகக் கூடாது.

இச்சை மட்டுமல்ல

தொடுதல் என்றால் அது சேர்வதற்கான முதல் அடி என்பது தவறு. தொடுதல் என்பது சோகத்தை போக்கும் கருவி. இன்பத்தை அதிகரிக்கச் செய்யும் அருவி. எனவே தெடுதல் என்பது அன்பிற்காகவே அதனை தவறாக வெளிப்படுத்துவதற்காக அல்ல இச்சையில் அர்த்தமாக கொள்வது தவறு.

உரசி கொள்வதற்கு அல்ல

இருதேகம் உரசி விறைப்பு அடைவது அல்ல தீண்டல் அது மோகம். ஓர் பெண்ணின் தேகத்தை உரசி மகிழும் கீழ்தர ஆசை ஓர் ஆணின் குணாதிசயம், பாத்திரத்தை ஆணிவேர் வரை பாதிக்கும் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். பெண் தேகத்தை வெறும் சதை பிண்டமாக கருதுவோர், அவள் குருதியிலிருந்து வெளிவந்து உயிர் பிண்டம் தான் நாம் அனைவரும் என்பதையும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

அம்மா தங்கை மனைவி மகள்

அம்மா தங்கை மனைவி மகள் என ஆண் பெண் மத்தியிலான தொடுதல் அன்பின் வெளிப்படாக பயன்படுத்தும் ஆண், அதுவே உறவுமுறையற்ற ஒரு பெண் வாழ்வில் கடந்து சென்றால் அதை இச்சையாக பார்க்கிறான் அந்த மூன்றாம் நபரான பெண்ணும், வேறு ஒருவரின் அம்மா, தங்கை, மனைவி, மகளாக இருக்கலாம். உங்களின் அம்மா, தங்கை, மனைவி, மகள் வேறொரு ஆணுக்கு மூன்றாம் நபராகவும் இருக்கலாம். சமூகத்தை திருத்தும் முன்னர், நாம் திருந்த வேண்டும் அல்லவா. முத்தம், அரவணைப்பு போல தீண்டலும் ஒரு அன்பின் வெளிபாடு தான். அதை சரியாக உணருங்கள். உங்களை ஒரு பெண் தீண்ட அனுமதிக்கிறாள் என்றால் அது அவள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, மற்றும் உங்களிடம் அவள் உணரும் பாதுகாப்பின் வெளிப்பாடு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here