கோடா, தோடா, இருளா, குரும்பா.. யார் இவர்கள்..? தமிழ்நாட்டிற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு..?

0
382

தமிழ்நாடு முழுவதும் பல கலாச்சாரம் உள்ளது, இதிலும் முக்கியமாகப் பழங்குடி மக்கள் மத்தியில் புதுமையான, வித்தியாசமான கலாச்சாரம், பழக்கவழக்கம் உள்ளது.

சரி தமிழ்நாட்டில் இருக்கும் பழங்குடி மக்கள் பற்றி எத்தனைப் பேருக்கு தெரியும். அவர்கள் அதிகப்படியாக எங்கு இருக்கிறார்கள்? தமிழ்நாட்டில் எத்தனைப் பழங்குடி குழுக்கள் உள்ளது? இவை அனைத்திற்கும் பதில் இந்தக் கட்டுரையில்.

Tribes people of Tamil Nadu: World Tribal Day - sparktv tamil கோடா, தோடா, இருளா, குரும்பா.. யார் இவர்கள்..? தமிழ்நாட்டிற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு..?

முக்கிய இடம்

தமிழ்நாட்டில் பழங்குடி மக்கள் அதிகம் இருக்கும் இடம் நீலகிரி. இந்த மலைகளில் சுமார் 5 பழங்குடி குழுக்கள் பல தலைமுறைகளாகத் தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ் நாடு முழுவதும் சுமார் 38 பழங்குடி மற்றும் துணை பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மக்கள் தொகை

2001ஆம் ஆண்டின் சென்செஸ் விபரங்கள் படி தமிழ்நாட்டில் இருக்கும் பழங்குடி மக்களின் மக்கள் தொகை 6,51,321.

முக்கியத் தொழில்

தமிழ் நாட்டில் இருக்கும் பழங்குடி மக்களின் பொதுவான தொழிலாக விவசாயம், கைவினை பொருட்கள் தயாரிப்பு, தேயிலை, கால்நடை வளர்ப்பு ஆகியவை முக்கியத் தொழிலாக உள்ளது.

ஆனால் தற்போது பல பிரிவினர் தமிழக அரசின் கல்வி உதவிகள் மூலம் கல்வி பெற்றுப் பல துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

முக்கியக் குழுக்கள்

நீலகிரி மலையில் 5 பழங்குடி மக்கள் பல தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்கள்.

கோடா, தோடா, இருளா, குறும்பா மற்றும் படகா ஆகிய குழுக்கள் நீலகிரி மலையில் வாழும் முக்கியமான பழங்குடியினர்கள். இக்குழுக்களைத் தாண்டி குட்டநாயகன், பலியான் ஆகியோரும் உள்ளனர்.

பலியான் குழு

பலியான் பழங்குடியினர் ஆதிகாலத்தில் பழனி மலையை முக்கியமாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். தற்போது அவர்கள் மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கோவை ஆகிய மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

சாதி

இந்தப் பழங்குடி மக்கள் மத்தியில் சாதி என்னும் வழக்கம் இல்லை, அனைவரும் குழுக்களாகவே பார்க்கப்பட்டு வருவது சிறப்பு வாய்ந்த விஷயம்.

இதேபோல் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் சாதி கட்டமைப்பு உடைந்து படிப்படியாகச் சாதியற்ற இனமாக மாறப் பழங்குடியினரின் குழு அமைப்புச் சரியானதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here