இதுதான் ஆணாதிக்க சமூகத்தின் மகளிர் தின பரிசா?

0
338

ஹெல்மட் அணியாதால் துரத்தி சென்று உதைத்து கர்ப்பிணி பெண் உஷா வேன் மோதி கணவர் கண்முன்னே  பலியாகியுள்ளார். இச்சம்பவம் பெண்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் அராஜகம்:
திருச்சியில் திருவெறும்பூர் ரவுண்டானா அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டுகொண்டியிருந்த போது அப்பொழுது இருசக்கர வாகனத்தில் ராஜா உஷா தம்பதி ஹெல்மட் போடாமல் வந்திருந்ததால் அவர்கள் நிற்காமல் சென்றனர். உடனே இன்ஸ்பெக்டர் ஜீப்பில் துரத்தி சென்று அவர்களை வழிமறித்து எட்டி உதைத்துள்ளார்.

 

துடிதுடித்த கர்ப்பிணி:
அதில் கீழே விழுந்த உஷா பின்னாடி வந்த வேனில் மோதி துடிதுடித்து சம்பவ இடத்திலே கணவர் கண்முன் பலியானார். இதில் பலியான உஷா பத்தாண்டுகள் கழித்து 3 மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. உடனே இன்ஸ்பெக்டர் காமராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். சம்பவ இடத்தில் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடி போராட்டம் நடத்தினர்கள்.

சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் அதிகாரி மற்றும் திருச்சி காவல் ஆணையர் மன்னிப்பு கேட்டனர். அதுமட்டுமில்லாமல் சம்பவத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் கடும் கண்டன குரல் எழுப்பபட்டு வருகிறது. மகளிர் தினத்திற்கு ஆணாதிக்க சமூகமும், இந்த அரசும் தரும் பரிசு இதுதானா? என பெண்கள் வெம்புகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here