இந்திய அளவுல எந்த ஊரெல்லாம் மாம்பழத்திற்கு ஃபேமஸ் தெரியுமா?

0
47

மாம்பழத்தை பிடிக்காதவர்கள் ஊரில் உண்டா. அதன் வாசமே நம்மை கடைகளை
நோக்கி இழுக்கும். அதன் சுவையும், மணமும் மூட்டை மூட்டையாய் மாம்பழம் வீட்டில் கொண்டு சேர்த்தாலும், அதன் மேலிருக்கும் ஆசை தீராது.

இந்தியாவில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் விளைவிக்கப்படுகின்றன.
இதில் மிக அதிக அளவில் விளைந்து, விலைபோகும் மாம்பழ வகைகளைப் பார்க்கலாம்.

 

அல்போன்ஸா :

அல்போன்சோ மாம்பழங்கள் தங்கம் கலந்த் மஞ்சள் நிறத்தில் விளையும், மும்பைக்கு
அருகிலுள்ள் ரத்தின கிரி ஊரில்தான் அல்போன்சா மாம்பழத்திற்கு பெயர் போனவை.

சௌன்சா :

இமயமலையில் இந்த பழங்கள் 1500 வருடங்களுக்கு முன் ஷெர் ஷாஹ் என்னும்
மன்னரால் பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டது. சௌன்சா என்ற மன்னரை
வீழ்த்திய பின் அவரின் நினியவால் இந்த வகை மாம்பழத்திற்கு பெயரிடப்பட்டதாம்.

தேசரி- லக்னோ :

தேசரி வகை மாம்பழங்கள் பிரசித்திப் பெற்றவை. சுன்மார் 200 வருடங்கள் முன்பு நவாப் மன்னரால் விளைவிக்கப்பட்ட வகையாகும். குறைவான நார்தசைகள் கொண்டவை. சுவையும், மணமும் அலாதியாக இருக்குமாம்.

கேசர்- குஜராத் :

கேசர் மாம்ம்பழ வகைகள் சற்று விலை அதிகமானது. ஏப்ரல்-ஜூலை வரை இதன்
விளைச்சல் இருக்கும்.இதனுடைய பளீர் அடர் அரஞ்சு நிறத்தினல இந்த பெயர்
பெற்றது.

பங்கனப்பள்ளி – ஆந்திரா :

இது மஞ்சள் நிறத்தில் முட்டிய வடிவத்தில் இருக்கும். மெலிதான தோலை கொண்டது.
பங்கனப்பள்ளி என்னும் ஊரில் விளைவதால் இது பங்கனப்பள்ளி என்றே பெயர் பெற்றது.

லங்க்ரா :

லங்க்ரா வாரனாசியில் விளைவிக்கப்படும் மாம்பழ வகையாகும். சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் இந்த மாம்பழ வகைகள் இருக்கும். ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் விளைச்சல் அமோகமாக இருக்கும்.

தொடபுரி – கர் நாடகா :

இந்த மாம்பழ வகைகள் கர் நாடகாவில் பிறப்பிடமாக இருந்தாலும் ஆந்திரா, தமிழ்
நாடுகளிலும் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. பச்சை நிறத்தில் கூர்மையான நுனி
கொண்டிருப்பதல கிளி மூக்கு மாங்காய், சண்டேர்ஷா, கல்லமை, பங்களூரா என பல
பெயர்கள் இஉர்க்கின்றது. ஊறுகாய், ஜூஸ் தயாரிக்க இந்த மாம்பழங்கள்
பயன்படுகின்றன.

ஹிம்சாகர் -மேற்கு வங்கம் :

ஹிம்சாகர் பச்சை நிறத்தில் இனிப்பான சுவையுட்ன நார் குறைவாக இருக்கும். மேற்கு
வங்கம் தவிர, ஹூக்ளி, பீகார், ஓடிசா போன்ற மாநிலங்களிலும் விளையப்படுகின்றது.
இது ஜூன் மாதம் மட்டுமே கிடைக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here