கண் திருஷ்டி, கெட்ட சக்தி உங்களை தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

0
1219

கல்லடி பட்டாலும் கண் திருஷ்டி படக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். சிலர் நம்மிடம் சிரித்து பேசினாலும் அவர்களுடைய பொறாமையான எண்ணங்கள் நமது
வாழ்விலும் சில எதிர்மறை எண்ணங்களை தாக்கிவிடும்.

அதனால்தான் யாராவது நீங்கள் போட்டிருக்கும் உடையை பிரமாதம் என்று வியந்த சில நிமிடங்களில் அந்த உடையில் கறையோ, அல்லது கிழிந்தோ கூட போகும்.

இது போல பலவிஷயங்கள் பலரும் அனுபவித்திருப்பார்கள். அவ்வாறு உண்டாகும் திருஷ்டி நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பதே இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள்.

சீரகம் :

எப்படிபட்டவர் வீட்டிற்குள் வந்து சென்றாலும் சுகம் கொடுக்க கூடியது சீரகம் என்று சித்தர்கள் கூறியுள்ளனர். எனவே ஒவ்வொருவர் வீட்டிலும் விருந்து நடைபெறும்
காலங்களில் கருப்பட்டி கலந்த சீரக பானகம் தயாரித்து வீட்டிற்கு வந்தவர்களுக்கு கொடுத்தால் விஷப் பார்வை உள்ளவர்களின் திருஷ்டி தோஷம் விலகும்.

குடும்ப திருஷ்டிக்கு :

குடும்பத்திருஷ்டியைப் போக்க, தெரு மண் கொஞ்சம், கடுகு, உப்பு, மூன்று காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அனைவரயும் அமரச் செய்து மூன்று முறை
எல்லோரையும் சுற்றி, எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்..இது கண் திருஷ்டியை போக்கும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்ய
வேண்டும்.

பௌர்ணமி :

நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், வீட்டு வாசலில் பெளர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம். வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம். சிலர் படிகாரக்கல், வெள்ளெருக்கு வேர், மருதாணிக்கட்டை சேர்த்தும் தொங்க விடுவர்.

ரக்க்ஷை :

ஹோம குண்டலத்திலிருந்து எடுக்கும் சாம்பலை (ரக்ஷை) நெய்யினால் குழைந்து நெற்றியில் இட்டுக் கொண்டு சென்றால் திருஷ்டி தாக்காது. குழந்தைகளுக்கு இப்படி
செய்யலாம். வேண்டும்.

மஞ்சள் குங்குமம் :

வீட்டு நிலையில் வெள்ளி தோறும் மஞ்சள் சிறிது பூசி குங்குமம் இடவேண்டும்.. இது நோய்கிருமிகளை அண்டாமல் பாதுகாப்பது மட்டுமில்லாமல் கண் திருஷ்டியையும்
போக்கும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here