வலி இல்லாத, சுகமான பிரசவத்தை பெற ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்!

0
95

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக மிக முக்கியமான ஒரு தருணமாகும். பெண்ணின் கருவில் வளரும் உயிரை மிகவும் கவனமாக வளர செய்ய வேண்டிய கடமை அந்த பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவளை சுற்றியுள்ள அனைவருக்குமே உண்டு.

கர்ப்பமாக இருக்கும் பெண்ணை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகள் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் கர்ப்ப காலத்தில் குழந்தை பிறக்க போகிறது என்ற மகிழ்ச்சியை மட்டும் பெறுவதில்லை.. அதோடு சேர்த்து பல வலிகளையும் அனுபவிக்கிறாள். ஆனால் அந்த வலிகள் அனைத்துமே தன் குழந்தையின் பிஞ்சு முகத்தை காணும் போது மறந்து போய்விடும்.

கர்ப்ப காலம் என்றாலே பயம் என்பது பல பெண்களுக்கு இருக்கும். இந்த பகுதியில் சுகமான, வலி குறைவான பிரசவத்தை பெறுவதற்கு கர்ப்ப காலத்தில் என்னென்ன பழக்கங்களை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக காணலாம்.

சரியாக சாப்பிட வேண்டும்

கர்ப்பிணி எக்காரணத்தை கொண்டும் தன்னை பட்டியாக வைத்துக் கொள்ள கூடாது. நீங்கள் சாப்பிட்டால் தான், தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கும் உணவு செல்லும் என்பதால் சத்தான சரிவிகித உணவினை சாப்பிடுங்கள்.

ஊட்டச்சத்து உணவு

கர்ப்ப காலத்தில் நிறைய காய்கள், பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி அந்ததந்த சீசனில் கிடைக்கும், காய்கள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டியதும் அவசியமாகும். இவ்வாறாக சாப்பிடுவதின் மூலமாகவே அறிவான மற்றும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம்.

முதல் மூன்று மாதங்கள்

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டல், வாந்தி முதலியவை இருக்கும். இந்த மாதிரியான சமயத்தில் நீங்கள் திட உணவை சாப்பிடுவதை காட்டிலும், திரவ உணவுகளை அதிகமாக சாப்பிடுவது என்பது சிறந்ததாகும். உடலில் நீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பால் குடிப்பது

கர்ப்பிணி பெண்கள் பால் குடிப்பதால் குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். மேலும் பாலில் உள்ள கால்சியம் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு வராமல் பாதுகாக்கும். கர்ப்ப காலத்தில் பாலுடன் தேன் கலந்து பருகுவது அவசியமான ஒன்றாகும்.

இரண்டாவது மூன்று மாதம்

கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில், இனிப்பு உணவுகள், தானிய வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிரில் சர்க்கரை கலந்து லசியாக பருகுங்கள். பிரவுன் ரைஸ் எடுத்துக் கொள்ளலாம். புரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியதும் அவசியமாகும்.

மூன்றாவது டிரைமெஸ்டர்

கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதத்தில், திட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தானியங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பாசிப்பயறு உணவில் இருக்கட்டும்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா மூலிகை பொடியையும், நெய்யையும் பாலில் கலந்து கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பருகுவதால் கருவில் இருக்கும் சிசு எந்த விதமான பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக வளரும். இது கர்ப்பிணிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை தர வல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவியாக உள்ளது.

இது கூடாது!

கர்ப்ப காலத்தில் வெறும் வயிற்றில் அஸ்வகந்தா மூலிகையை சாப்பிட கூடாது. மேலும் விரத காலத்திலும் சாப்பிட கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்

தவிர்க்க :

கர்ப்ப காலத்தில் நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டியது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ரோட்டு கடைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டாம்.

மசாஜ்

கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்தில் இருந்து ஆயில் மசாஜ் செய்ய வேண்டியது என்பது அவசியமாகும். இது உடல் சோர்வு, உடல் வலி போன்றவற்றை நீக்க உதவுகிறது. மேலும் பிரசவத்திற்கு பின்னர் வரும் தழும்புகள், சருமம் சுருங்குவது போன்றவற்றில் இருந்து உங்களை காப்பாற்றும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here