வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிவது எப்படி?

0
43

பெண்களுக்கு தாய்மையை விட மிக சிறந்த வரம் என்று எதுவும் இருக்க முடியாது. குழந்தை கருவில் இருக்கும் போது நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை ஸ்கேன் செய்து தான் பார்க்க வேண்டும் என்பதில்லை.. ஆனால் ஸ்கேன் செய்வதும் அவசியம் தான். மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே ஸ்கேன் செய்ய வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகளை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. இருதய துடிப்பு அறிதல்

குழந்தையின் இருதயமானது கர்ப்பத்தின் 5 ஆவது வாரத்தில் இருந்து துடிக்க ஆரம்பித்து விடுகிறது. ஆனால் நாம் அதை உணர 10 வாரங்கள் ஆகும். சில சமயங்களில் குழந்தையின் இருதய துடிப்பினை உணர முடியாமல் போனால், அதற்கு கர்ப்பப்பை குழந்தைக்கு அழுத்தமாக இருப்பதும், குழந்தை இடம் மாறுவதும் கூட காரணமாக இருக்கலாம். இது பற்றி மருத்துவரிடம் கேட்டறிவது என்பது சிறந்ததாகும்.

2. கர்ப்பப்பையின் உயரம்

கர்ப்பப்பையின் உயரம் என்பது அந்தரங்க எழும்பில் இருந்து ஆரம்பிக்கிறது. சிசு வளர வளர கருப்பப்பையும் சேர்ந்து வளருகிறது. அவ்வாறு கருப்பப்பையின் வளர்ச்சியில் உங்களுக்கு எந்த மாற்றமும் தெரியவில்லையில், அதற்கு குழந்தை கர்ப்பப்பையில் அல்லாமல் வேறு பகுதியில் வளருவதும் காரணமாக அமையும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் காண்பிப்பது அவசியமாகும்.

3. IUGR நோய் கண்டறிய வேண்டும்

IUGR என்ற பரிசோதனை முறையானது குழந்தையின் ஒவ்வொரு உடல் பாகமும் சரியாக இயங்குகிறதா என்பதை பற்றி கண்டறிய உதவும் முறையாகும். இந்த பரிசோதனையை மருத்துவர்கள் முன்னரே செய்வதன் மூலமாக, குழந்தைகளின் உடல் பாகங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை கருவிலேயே சரி செய்து கொள்ளலாம்.

4. HCG

HCG என்பது உடலில் உள்ள ஹார்மோன்களின் ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவும் ஒரு முறையாகும். இந்த ஹார்மோன் ஆனது கருமுட்டையை பாதுகாக்கும் பணியினை செய்யும். இரத்த மாதிரியை கொண்டு இந்த பரிசோதனையை செய்வார்கள். இந்த HCG அளவானது கர்ப்பத்தின் 8 முதல் 11 வாரத்தில் அதிகமாக இருக்கும். அப்போது தான் இந்த பரிசோதனையை செய்வார்கள். இது 5 mIU/ml க்கும் குறைவாக இருந்தால் குறைபிரசவம் அல்லது கருக்கலைப்பு உண்டாகும்.

5. தசைப்பிடிப்பு

தசைப்பிடிப்பு என்பது கர்ப்பத்தின் எந்த மாதத்தில் வேண்டுமானலும் உண்டாகலாம். ஒருபுறம் மட்டுமே அதிகமான தசைப்பிடிப்பு மற்றும் அதனுடன் சேர்த்து இரத்தப்போக்கும் உண்டானால் இதனை உடனடியாக மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ள வேண்டியது என்பது அவசியமாகும்.

6. இரத்தப்போக்கு உண்டாவது

கர்ப்ப காலத்தில் வெஜினா பகுதியில் இருந்து இரத்தப்போக்கு உண்டானால், அது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாகும். ஒரு துளி இரத்தப்போக்கு இருந்தாலும் கூட அதனை சாதாரணமான ஒன்றாக விட்டு விட கூடாது. இது கருக்கலைப்பு, ஹார்மோன் பிரச்சனைகளின் காரணமாக இருக்கலாம். எனவே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும்.

7. தொடர் இடுப்பு வலி

இடுப்பு வலி என்பது கர்ப்ப காலத்தில் வரும் ஒன்று தான்.பொதுவாக இந்த இடுப்பு வலியானது முதுகு தண்டில் மற்றும் கீழ் இடுப்பு பகுதியில் உண்டாகும். நீங்கள் இதனை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டியது என்பது மிக மிக முக்கியம். நீண்ட நாட்கள் இந்த வலி தொடர்ந்தாலோ அல்லது வலி அதிகமாக இருந்தாலோ நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

8. வெஜினா திரவத்தின் தன்மை

வெஜினா திரவம் வெளியேறுவது என்பது ஒரு சாதாரண நிலையாகும். ஆனால் இந்த வெஜினா திரவமானது பொதுவாக எந்த நிறமும் இல்லாமல் தான் இருக்கும். வெஜினா திரவத்துடன் சேர்ந்து இரத்தம் வெளியேறுவது, கடுமையான வலி உண்டாவது போன்ற நிலை உருவானால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

9. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை

வயிற்றில் வளரும் கருவின் நிலையினை முழுமையாக அறிந்து கொள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை உதவுகிறது. இது கருவின் அளவு, எடை, இரத்த ஓட்டம், இருதய துடிப்பு, போன்றவற்றை அறிவதற்கு இந்த பரிசோதனை உதவுகிறது. இந்த பரிசோதனை முடிவு திருப்திகரமானதாக இல்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியமானதாகும்.

10. கர்ப்ப பரிசோதனை சாதனம்

பெண்கள் இப்போது எல்லாம் வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து கொள்கிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போதிலும், கடைகளில் கிடைக்கும் கர்ப்ப பரிசோதனை கிட்களில் நெகட்டிவ் என்றே ரிசல்ட் வந்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here